அப்பாவுக்குக்காக சிவகாசியில் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்ரீதேவி!
மறைந்த நடிகை ஸ்ரீதேவி தனது தந்தைக்காக 1989ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.
சென்னை: மறைந்த நடிகை ஸ்ரீதேவி தனது தந்தைக்காக 1989ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.
உறவினரின் திருமணத்திற்கு துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பால் அங்கேயே மரணமடைந்தார். நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்ரீதேவியின் உடல் துபாய் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்காததால் அவரது உடல் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் குடும்பம்
இந்நிலையில் அரசியல் பின்புலத்தை சேர்ந்த குடும்பத்தில் இருந்து வந்த ஸ்ரீதேவி அதனை தனது திரை வாழ்வில் எங்கேயும் வெளிப்படுத்தியதில்லை. ஆம் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.

ஸ்ரீதேவி பிரச்சாரம்
ஸ்ரீதேவியின் தந்தையான ஐயப்பன் 1989ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சிவகாசி தொகுதில் காங்கிரஸ் போட்டியிட்டார். அப்போது ஸ்ரீதேவி தனது தந்தையுடன் ஒரு வார காலம் சிவகாசி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஸ்ரீதேவி.

தேர்தலில் தோல்வி
ஆனால் அந்த தேர்தலில் ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பன் தோல்வியடைந்தார். ஆனாலும் முன்னதாக அவரது பெரியப்பா ராமசாமி 1977ல் ஜனதா கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக 10 ஆண்டுகளும், அனுப்பன்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக 20 ஆண்டுகளும் இருந்துள்ளார்.

பெற்றோர் மரணம்
ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பன் 1990ல் மாரடைப்பாலும் 1996ம் ஆண்டு தாய் ராஜேஸ்வரி புற்று நோயாலும் மரணமடைந்தனர். அதன் பிறகே ஸ்ரீதேவி திருமணம் செய்துகொண்டார்.

பார்க்காமலேயே மறைந்த மயிலு
ஆனால் அதற்கு பிறகு இதுவரை சொந்த ஊருக்கு நடிகை ஸ்ரீதேவி வரவில்லை.அவரது பெற்றோரின் இறப்புக்குப் பின்னர் வர இயலாத சூழ்நிலையால் நீண்ட நாட்களாக சொந்த ஊரையே பார்க்காமலேயே மறைந்துவிட்டார் மயிலு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications