உடல் நலனில் பெரும் அக்கறை கொண்ட ஸ்ரீதேவி எழ முடியாத அளவுக்கு மது அருந்தினாரா?
நடிகை ஸ்ரீதேவி மதுபோதையில் ஹோட்டல் பாத் டப்பில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.
Recommended Video

சென்னை: நடிகை ஸ்ரீதேவி மதுபோதையில் ஹோட்டல் பாத் டப்பில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது. உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட ஸ்ரீதேவி கீழே விழும் அளவுக்கு மது அருந்தினாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நடிகை ஸ்ரீதேவி உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை கணவர் மற்றும் மகள் குஷியுடன் பங்கேற்றார். இதையடுத்து அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்த அவர் குளியலறைக்கு சென்றார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது கணவர் போனி கபூர் ஹோட்டல் உதவியாளர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது அவர் பாத் டப்பில் மயங்கி கிடந்தார்.

கார்டியாக் அரஸ்ட்
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்ரீதேவியை சோதித்த மருதுத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் கார்டியாக அரஸ்ட்டால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்டது.

ஆய்வு அறிக்கை ஒப்படைப்பு
இதையடுத்து ஸ்ரீதேவியின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையை துபாய் அரசு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளது.

பாத் டப்பில் மூழ்கி உயிரிழந்தார்
அதில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடையவில்லை என்றும் பாத் டப்பில் மூழ்கி உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமாக மது
மேலும் ஸ்ரீதேவியின் ரத்த பரிசோதனை அறிக்கையில் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததும் தெரியவந்துள்ளது. மது போதையில் பாத் டப்பில் தவறி விழுந்த ஸ்ரீதேவி மூச்சுதிணறி பாத் டப்பிலேயே உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.

உடல் நலனில் அதிக அக்கறை
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதிலும், உடல் நலனில் அதிக அக்கறை செலுத்துவதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பார் ஸ்ரீதேவி. தினமும் உடற்பயிற்சி, வாரத்திற்கு இருமுறை டென்னிஸ், நீச்சல் என தனது ஃபிட்னஸை பார்த்துக்கொண்டார் ஸ்ரீதேவி.

நம்ப முடியாத அதிர்ச்சி
ஸ்ரீதேவி பொரித்த உணவுகளை உண்டே 30 ஆண்டுகள் ஆகிவிட்டன என செய்திகள் வெளியானது. அப்படி இருக்கையில் நிலைத்தடுமாறி கீழே விழும் அளவுக்கு அதிகமாக ஸ்ரீதேவி மது அருந்தினார் என வெளியாகியுள்ள தகவல் திரைத்துறையினரிடையே நம்ப முடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications