ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 5 லட்சம் பறிமுதல்!
ஸ்ரீரங்கம்: கொள்ளிடம் சோதனைச் சாவடியில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 5 லட்சம் பணத்தைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு அடுத்தமாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

இந்நிலையில், நேற்றிரவு கொள்ளிடம் சோதனைச் சாவடியில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுவரை ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியுள்ள ஸ்ரீரங்கம் தேர்தல் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்னோட்டமாகக் கருதப்படுவதால் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications