தூக்கியடிக்கப்பட்ட ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரி மனோகரன் – புதிய அதிகாரியாக பதவியேற்றார் டி.ஜி.வினய்
திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியான கோட்டாட்சியர் மனோகரன் மாற்றப்பட்டு புதிய தேர்தல் அதிகாரியாக சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் டி.ஜி. வினய் பதவியேற்றுக்கொண்டார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரியான வினய் சென்னை மாநகராட்சியின் வருவாய் நிதிப்பிரிவு ஆணையராகத் பணியாற்றி வந்தார். மனோகரன் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் தேர்தல் நடத்தும் அதிகாரியாக அவர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

தேர்தல் அதிகாரியாக இருந்த மனோகரனின் செயல்பாடுகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மேலும், மனோகர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக எதிர்க்கட்சியினர் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தனர்.
இதன் எதிரொலியாக, ஸ்ரீரங்கம் தேர்தல் நடத்தும் அதிகாரி பொறுப்பிலிருந்து மனோகரன் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக, சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் வினய் நேற்று இரவோடு இரவாக புதிய அதிகாரியாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி மாற்றங்கள் ஸ்ரீரங்கம் தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications