பிரியாணி போட்டு பெற்ற வெற்றியைக் கொண்டாட எப்படித்தான் மனசு வருகிறதோ.. கனிமொழி கிண்டல்
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நியாயமாக நடந்திருந்தால் அதிமுக தோற்றிருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார் திமுக மகளிரணி செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி.
நடந்து முடிந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் அதிமுக அதிக வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளது.
இது தொடர்பாக திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கூறியதாவது : ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், ஏதோ அபார வெற்றி பெற்று விட்டது போல, ஆளுங்கட்சியினர் கொண்டாடி தீர்க்கின்றனர். அவர்கள் மாபெரும் தலைவராக மதிக்கும் மக்கள் முதல்வரின் செல்வாக்கால்தான், இந்த வெற்றி கிடைத்தது என அவர்கள் ஏன் கூவவில்லை.

அப்படியென்றால், அந்தம்மா இல்லாமலேயே எங்களால் இத்தனை பெரிய வெற்றியை பெற முடியும் என, ஆளுங்கட்சியினர் சொல்லி, அதை கொண்டாடுகின்றனரா? ஜெயலலிதாவின் செல்வாக்கு என்பதெல்லாம் சும்மா என்பதை ஆளுங்கட்சியினர் ஒப்புக் கொள்கின்றனரா? அ.தி.மு.க., பக்கம்தான் மக்கள் இருக்கின்றனர் என்றால், முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம் திருச்சிக்கு சென்று பணம் கொடுத்து, ஓட்டுகளை விலைக்கு வாங்க சொன்னது ஏன்?
நியாயமாக தேர்தல் நடந்திருந்தால், அ.தி.மு.க., தோற்றிருக்கலாம். 29 அமைச்சர்கள் தொகுதிக்குள் சென்று உட்கார்ந்து கொண்டு, மட்டன் பிரியாணி சமைத்துப் போட்டு, பணம் கொடுத்து ஓட்டை வாங்கி கிடைத்த வெற்றி எப்படித்தான், மனசு வந்து கொண்டாடுகின்றனரோ?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications