For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்கக்கோரி மேற்கொண்ட உண்ணாவிரத்தை பாதியிலேயே முடித்தார் ஜீயர்!

ஆண்டாள் குறித்து அவதூறாக பேசிய கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் 2வது நாளாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    உண்ணாவிரத்தை பாதியிலேயே முடித்தார் ஜீயர்!

    ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஆண்டாள் குறித்து அவதூறாக பேசிய கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் 2வது நாளாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டார்.

    ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறாக பேசியதாக இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கவிஞர் வைரமுத்து மீது காவல் நிலையங்களில் ஆங்காங்கே புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

    ஜீயர் கெடு

    ஜீயர் கெடு

    இந்நிலையில் ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதற்கு கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் 16ஆம் தேதி மாலைக்குள் நேரிடையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஜீயர் மணவாள மாமுனிகள் சடகோப ராமானுஜர் கெடு விதித்திருந்தார்.

    நேற்று உண்ணாவிரதம்

    நேற்று உண்ணாவிரதம்

    ஆனால் கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கோரவில்லை. இதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஜீயர் மணவாள மாமுனிகள் சடகோப ராமானுஜர் நேற்று உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

    திரண்ட பக்தர்கள்

    திரண்ட பக்தர்கள்

    இன்று 2வது நாளாக அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக பக்தர்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பாதியிலேயே முடித்த ஜீயர்

    பாதியிலேயே முடித்த ஜீயர்

    சடகோப ராமானுஜ ஜீயரிடம் போராட்டத்தை கைவிடும்படி அறநிலையத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ஜீயர் தனது போராட்டத்தை நிறைவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    English summary
    Srivilliputhur jeeyar concludes his hunger strike on the 2nd day. He urges Poet Vairamuthu sholud appologi in Srivilliputhur for the talk of goddess Andal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X