மீண்டும் கொலை மிரட்டல் கடிதம்.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பதில் என்ன தெரியுமா?
ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயருக்கு இரண்டாவது முறையாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லியுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயருக்கு இரண்டாவது முறையாக கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பெயரில் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. கொலை மிரட்டலை ஆண்டாளும் அரசும் பார்த்துக் கொள்வார்கள் என்று ஜீயர் பதில் அளித்துள்ளார்.
ராஜபாளையத்தில் நடந்த விழாவில் கவிஞர் வைரமுத்து இந்து கடவுளான ஆண்டாளை இழிவுபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் கண்டனம் தெரிவித்தார். மேலும் வைரமுத்து ஆண்டாள் சன்னதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதமும் இருந்தார்.
பின்னர் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஜீயர் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அந்த சமயத்தில் அவருக்கு போனில் கொலை மிரட்டல் வந்தது. இதனையடுத்து பிப்ரவரி மாதம் 3ம் தேதி வரை வைரமுத்துவிற்கு அவகாசம் கொடுத்து உண்ணாவிரதத்தை ஒத்திவைத்தார்.

உண்ணாவிரதம் இருந்த ஜீயர்
இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 5ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் அறிவித்த ஜீயர், பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட கோரிக்கை விடுத்ததையடுத்து 2வது முறையும் பாதியிலேயே உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

திருச்சியில் இருந்து வந்த மிரட்டல்
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாகவே ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு தொலைபேசி வாயிலாகவும் கடிதம் வழியாகவும் மிரட்டல்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி, பாலக்கரை, பெரியார்நகர், டாக்டர் அம்பேத்கார் மற்றும் பெரியார் தலித் கூட்டமைப்பு என்று விலாசமிட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கொலை செய்ய தயங்க மாட்டோம்
எங்களைப்பற்றி ஏதாவது பேசினால் கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜேந்திரன் என்பவரின் பெயரில் 2வது முறையாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

அரசு பார்த்துக்கொள்ளும்
கொலை மிரட்டல்கள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் கூறியதாவது : ஒரு மாதத்தில் தொடர்ந்து மிரட்டல் கடிதம் வந்துகொண்டே இருக்கிறது. நாங்கள் மிரட்டல் கடிதங்களுக்கு பயப்படவில்லை, நாங்கள் நம்பும் ஆண்டாள் எங்களுடன் இருக்கும் வரை எந்த பயமும் கிடையாது. கொலை மிரட்டல்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது, அதனை அரசு பார்த்துக் கொள்ளும் என்றும் ஜீயர் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications