அன்று முதல் இன்று வரை மாறாத ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ஆன்லைனில்...
பாண்டிய மன்னன் வல்லபதேவன் அரண்மனையில் பல்வேறு விவாதங்களில் கலந்து கொண்டு வென்று வந்த பொன் மூலம்தனது மருமகனான பெருமாளுக்கு 11 அடுக்குகள் கொண்ட 192 அடி உயர கோபுரத்தைக் கட்டினாராம். அத்தனை பெருமை பெற்றஇந்த கோபுரம்தான் தமிழக அரசின் சின்னமாகவும் இருக்கிறது. உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை கொண்டு பிரத்யேகசுவையில் தயாரிக்கப்படும் உணவுகள் உலகப் புகழ் பெறுவது போலவே, கோயில் பிரசாதங்கள் மட்டுமன்றி, கோயிலிருக்கும்ஊரில் கிடைக்கும் உணவுகளும் புகழ் பெற்றுவிடுகின்றன.

இந்த வகையில் உலக அளவில் மிக பிரபலமானது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா. இது பாலும் சர்க்கரையும் சேர்த்துதயாரிக்கப்படும் ஓர் இனிப்புப் பலகாரம் இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பர்.
எத்தனையோ ஊர்களில் பால்கோவா தயாரிக்கப்பட்டாலும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மட்டும் ஏன் உலக அளவில்பிரபலம் என்று தெரியுமா? பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இங்கு பால்கோவா இருந்ததை உணர்த்தும் விதமாக இன்றும்இங்குள்ள ஆண்டாள் கோயிலில் நடைபெறும் வழிபாட்டுச் சடங்கின் அடிப்படையில் பால்கோவாவின் வரலாற்றை அறியமுடிகிறது. அதாவது ஆண்டாள் திருமணம் ஆன பிறகு, பிறந்த வீட்டுக்குச் செல்லும் ஒரு சடங்கின்போது சுண்ட காய்ச்சிய பால்,வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பாலை ஆண்டாளுக்குப் படைக்கிறார்கள். பால்கோவா தயாரிக்கும் முறையும் இதைபோன்றதே என்பதால் இந்த வழிபாட்டு மரபில் இருந்து பால்கோவாவின் வரலாறு பல நூற்றாண்டுப் பழமையானது எனலாம்.எனினும் உலக அளவில் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா பிரபலம் ஆனது 20ம் நூற்றாண்டில் தான்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பால் பண்ணைகள் அதிகம் இங்கு பால் கோவா போன்று பால் அல்வா, பால் கேக், சர்க்கரை சேர்க்காத பால்கோவா, கேரட் அல்வா போன்றவை இங்கு அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. பால் சொசைட்டிகளில் பால் வரும் நேரத்தைகணக்கில் கொண்டு காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மீண்டும் மாலை 5 முதல் இரவு 11 மணி வரையும்பால்கோவாக்கள் சுடச்சுட தயாராகின்றன. அனைத்தும் அன்றே தீர்ந்து விடுவது அவற்றின் சுவைக்கும் தரத்துக்கும் சான்று.
இந்த ருசியான பால்கோவா தயாரிக்கும் முறை:
ஒரு கேன் பால் என்பது பத்து லிட்டர், இதில் ஒன்றேகால் கிலோ ஜீனியை போட்டு மெதுவாக கலக்குகிறார்கள். இதை செய்யகேஸ் அடுப்பு பயன்படுத்துவதில்லை, இன்றும் முந்திரிக் கொட்டை ஓடுகளைத்தாம் அடுப்பு எரிக்கப் பயன்படுத்துகின்றனர். இந்தமுந்திரிக்கொட்டைகள் வெகு நேரம் நின்று எரியக்கூடியது. அதனால் கிடைக்கும் சீரான வெப்பம் பால்கோவா தயாரிப்பின்சுவையைக் கூட்டுகிறது. அதுவும் இந்த சுவைக்கு ஒரு காரணம் போலும் ! மெதுவாக அந்த பாலை கிண்ட கிண்ட அது சுண்டிவருகிறது. இதை செய்ய கடின உழைப்புதான் ஆதாரம் என்றாலும் மக்கள் அதை ஒரு கலையின் வெளிப்பாடாகவேபார்க்கிறார்கள். இந்த உழைப்பாளிகளின் கடின உழைப்புதான் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு உலக அரங்கில் தனிஅடையாளத்தைப் பெற்றுத்தந்திருக்கிறது. இதே தரத்திலும் ருசியிலும் நேடிவ்கிருஷ்.காம் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை தயாரித்து உங்கள் இல்லத்திற்கே கொண்டு வந்து சேர்க்கிறது. நீங்கள் ஆன்லைனில் நேடிவ்கிருஷ்.காம் தளத்தில் ஆர்டர்செய்தாலே போதும் உங்கள் இல்லம் வந்து சேரும்.
தமிழகத்தில் பலதரப்பட்ட ஊர்களில் சிறப்பு வாய்ந்த நொறுக்கு தீனிகளை ஒரே நேரத்தில் வாங்க முடியாமலும் அதன் பயனைஅடைய முடியாமலும் நம் மக்கள் அவசர கதியில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் துரித உணவை உண்டு உடல்நலத்தை கெடுத்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் உடல் நலத்தை காக்கவும் நேரத்தை மிச்சபடுதவும் உங்கள் தேவையை எங்கள் சேவையாக கொண்டு வெவ்வேறுஊர்களின் சிறப்பு பெற்ற நொறுக்கு தீனிகள் இல்லம் தேடி வருகிறது.
நாவில் சுவை தருகிறது. உங்கள் நேடிவ்க்ருஷ்.காம் (www.nativcrush.com).
ஒவ்வொரு ஊரில் ஒரு தின்பண்டம் சிறப்பு அவற்றை ஒரே இணையதளத்தில் மிக குறைவான விலையில் விற்கிறது நமது நேடிவ்க்ருஷ்.காம். உங்களுக்கு பிடித்த மற்றும் ஆசை பட்டு உண்ண நினைத்த பல பிரபலமான தின்பண்டங்களை மிக எளிதாகஆன்லைனில் ஆர்டர் செய்து உங்கள் வீட்டிற்கே வந்து சேரும் தின்பண்டங்களை ருசித்து மகிழுங்கள் ..

நாம் நமது சொந்த ஊர்களை விட்டு இந்தியாவின் பல இடங்களில் வேலைக்காக மற்றும் படிக்கச் சென்றுள்ளோம். அங்குஎன்னதான் பல விதமான ஸ்நாக்ஸ் சாப்பிட்டு இருந்தாலும், நமது சொந்த ஊர் ஸ்நாக்ஸ்களுக்கு ஈடாகாது என்பதை உணர்ந்து,ஒவ்வொரு ஊரின் தனித்துவமான மற்றும் அனைத்து வகையான ஸ்நாக்ஸ்களையும் எல்லோரிடமும் கொண்டு சேர்க்கஉருவாக்கப்பட்டது தான் Nativcrush.com.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications