பால்மனம் மாறா ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ஆன்லைனில்.... நாங்க புதுசுங்கோ...

Subscribe to Oneindia Tamil

பாண்டிய மன்னன் வல்லபதேவன் அரண்மனையில் பல்வேறு விவாதங்களில் கலந்து கொண்டு வென்று வந்த பொன் மூலம் தனது மருமகனான பெருமாளுக்கு 11 அடுக்குகள் கொண்ட 192 அடி உயர கோபுரத்தைக் கட்டினாராம். அத்தனை பெருமை பெற்ற இந்த கோபுரம்தான் தமிழக அரசின் சின்னமாகவும் இருக்கிறது. உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை கொண்டு பிரத்யேக சுவையில் தயாரிக்கப்படும் உணவுகள் உலகப் புகழ் பெறுவது போலவே, கோயில் பிரசாதங்கள் மட்டுமன்றி, கோயிலிருக்கும் ஊரில் கிடைக்கும் உணவுகளும் புகழ் பெற்றுவிடுகின்றன.

இந்த வகையில் உலக அளவில் மிக பிரபலமானது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா. இது பாலும் சர்க்கரையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஓர் இனிப்புப் பலகாரம் இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பர்.

Srivilliputhur Palkova | Buy Srivilliputhur palkova online!

எத்தனையோ ஊர்களில் பால்கோவா தயாரிக்கப்பட்டாலும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மட்டும் ஏன் உலக அளவில் பிரபலம் என்று தெரியுமா? பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இங்கு பால்கோவா இருந்ததை உணர்த்தும் விதமாக இன்றும் இங்குள்ள ஆண்டாள் கோயிலில் நடைபெறும் வழிபாட்டுச் சடங்கின் அடிப்படையில் பால்கோவாவின் வரலாற்றை அறிய முடிகிறது. அதாவது ஆண்டாள் திருமணம் ஆன பிறகு, பிறந்த வீட்டுக்குச் செல்லும் ஒரு சடங்கின்போது சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பாலை ஆண்டாளுக்குப் படைக்கிறார்கள். பால்கோவா தயாரிக்கும் முறையும் இதை போன்றதே என்பதால் இந்த வழிபாட்டு மரபில் இருந்து பால்கோவாவின் வரலாறு பல நூற்றாண்டுப் பழமையானது எனலாம். எனினும் உலக அளவில் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா பிரபலம் ஆனது 20ம் நூற்றாண்டில் தான்.

Srivilliputhur Palkova | Buy Srivilliputhur palkova online!

ஸ்ரீவில்லிபுத்தூரில் பால் பண்ணைகள் அதிகம் இங்கு பால் கோவா போன்று பால் அல்வா, பால் கேக், சர்க்கரை சேர்க்காத பால் கோவா, கேரட் அல்வா போன்றவை இங்கு அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. பால் சொசைட்டிகளில் பால் வரும் நேரத்தை கணக்கில் கொண்டு காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மீண்டும் மாலை 5 முதல் இரவு 11 மணி வரையும் பால்கோவாக்கள் சுடச்சுட தயாராகின்றன. அனைத்தும் அன்றே தீர்ந்து விடுவது அவற்றின் சுவைக்கும் தரத்துக்கும் சான்று.

இந்த ருசியான பால்கோவா தயாரிக்கும் முறை:

ஒரு கேன் பால் என்பது பத்து லிட்டர், இதில் ஒன்றேகால் கிலோ ஜீனியை போட்டு மெதுவாக கலக்குகிறார்கள். இதை செய்ய கேஸ் அடுப்பு பயன்படுத்துவதில்லை, இன்றும் முந்திரிக் கொட்டை ஓடுகளைத்தாம் அடுப்பு எரிக்கப் பயன்படுத்துகின்றனர். இந்த முந்திரிக்கொட்டைகள் வெகு நேரம் நின்று எரியக்கூடியது. அதனால் கிடைக்கும் சீரான வெப்பம் பால்கோவா தயாரிப்பின் சுவையைக் கூட்டுகிறது. அதுவும் இந்த சுவைக்கு ஒரு காரணம் போலும் ! மெதுவாக அந்த பாலை கிண்ட கிண்ட அது சுண்டி வருகிறது. இதை செய்ய கடின உழைப்புதான் ஆதாரம் என்றாலும் மக்கள் அதை ஒரு கலையின் வெளிப்பாடாகவே பார்க்கிறார்கள். இந்த உழைப்பாளிகளின் கடின உழைப்புதான் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு உலக அரங்கில் தனி அடையாளத்தைப் பெற்றுத்தந்திருக்கிறது. இதே தரத்திலும் ருசியிலும் நேடிவ்கிருஷ்.காம் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை தயாரித்து உங்கள் இல்லத்திற்கே கொண்டு வந்து சேர்க்கிறது. நீங்கள் ஆன்லைனில் நேடிவ்கிருஷ்.காம் தளத்தில் ஆர்டர் செய்தாலே போதும் உங்கள் இல்லம் வந்து சேரும்.

தமிழகத்தில் பலதரப்பட்ட ஊர்களில் சிறப்பு வாய்ந்த நொறுக்கு தீனிகளை ஒரே நேரத்தில் வாங்க முடியாமலும் அதன் பயனை அடைய முடியாமலும் நம் மக்கள் அவசர கதியில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் துரித உணவை உண்டு உடல் நலத்தை கெடுத்து கொண்டிருக்கிறார்கள்.

Srivilliputhur Palkova | Buy Srivilliputhur palkova online!

அவர்கள் உடல் நலத்தை காக்கவும் நேரத்தை மிச்சபடுதவும் உங்கள் தேவையை எங்கள் சேவையாக கொண்டு வெவ்வேறு ஊர்களின் சிறப்பு பெற்ற நொறுக்கு தீனிகள்

இல்லம் தேடி வருகிறது

நாவில் சுவை தருகிறது. உங்கள் நேடிவ்க்ருஷ்.காம் (www.nativcrush.com)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+