ரயில்வே ஊழியர்கள் ஸ்டிரைக்: கண்ணையா ஒத்திவைத்தார்... நடக்கும் என்கிறார் சூரியபிரகாஷ்
சென்னை: ரயில்வே ஊழியர்கள் ஜூலை 11 முதல் அறிவித்திருந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) தொழிற்சங்க பொதுச்செயலாளருமான என்.கண்ணையா கூறியுள்ளார். திட்டமிட்டபடி ஜூலை 11ல் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம்
நடைபெறும் என்று எஸ்ஆர்இஎஸ் ரயில்வே சங்க பொதுச்செயலாளர் சூரிய பிரகாசம் அறிவித்துள்ளார்.
ரயில்வே உள்பட அனைத்து துறைகளிலும் அன்னிய முதலீடு, தனியார் கம்பெனிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு என்பது நீடித்தால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ரயில்வே துறையே காணாமல் போகும். பத்து லட்சம் ரயில்வே ஊழியர்கள் வேலையை இழக்க நேரிடும். இட ஒதுக்கீடு மூலம் வேலை பெற்று வரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோர் கடுமையாக பாதிப்படைவார்கள்.

ரயில்வே தனியார் வசம் சென்றால் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்கள் பெருமளவு உயரும். மின்சார ரயில் கட்டணமும் வெகுவாக உயர்ந்து விடும். இதனால் மக்கள் பாதிக்கப்படுவது உறுதி. ‘ஹை-ஸ்பீடு' எனும் அதிவேக ரயில்கள் அறிமுகம் என்ற பெயரில் கட்டண கொள்ளை நடக்கும். வெறும் 5 அல்லது 10 நிமிடங்கள் முன் செல்வதற்காக ரூ.100 முதல் ரூ.300 வரை கட்டணம் வசூலிக்கப்படும். எனவே மத்திய அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 11ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் அழைப்பு விடுத்திருந்தது.
இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்ஆர்எம்யு பொதுச் செயலாளர் கண்ணையா, ஜூலை 11ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளதாக அறிவித்திருந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.
7வது சம்பள கமிஷனில் அறிவிக்கப்பட்டுள்ள அடிப்படை ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மாற்றி அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தோம். இதனை பரிசீலனை செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கோரிக்கைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளதாகவும் கண்ணையா தெரிவித்தார்.
இதனால் ஜூலை 11ம் தேதி முதல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ரயில்வே ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க திட்டமிட்டுள்ளதா தெரிவித்துள்ளார். ரயில்வே போராட்டம் குறித்து உடனடியாக செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கும் கண்ணையா நன்றி கூறினார்.
இதனிடையே திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே ஊழியர்கள் இன்று திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் ரயில் பெட்டி தயாரிப்பு, டீசல் என்ஜின் பழுதுபார்ப்பு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ரயில்வே தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு மற்றும் அடிப்படை ஊதியத்தை உயர்த்தித் தரக் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்ணையாவின் அறிவிப்பை அடுத்து பொன்மலை ரயில் நிலையத்தில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
காலவரையற்ற போராட்டம் நடக்கும்
இதனிடையே அறிவித்தபடி ஜூலை 11ல் ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் என்று எஸ்ஆர்இஎஸ் ரயில்வே சங்க பொதுச்செயலாளர் சூரிய பிரகாசம் அறிவித்துள்ளார். கன்னையாவின் அறிவிப்பு தன்னிச்சையானது என்றும் ஜூலை 11ம் தேதி எஸ்ஆர்எம்யூ ரயில்வே ஊழியர்கள் தவிர எஸ்ஆர்இஎஸ் சங்கத்தினர், மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் சூரிய பிரகாசம் கூறியுள்ளார்.
எஸ்ஆர்எம்யூ ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தை ஒத்திவைத்துள்ள நிலையில் பிற சங்கத்தினர் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று சூரியபிரகாசம் அறிவித்துள்ளதால் இந்த போராட்டம் எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications