பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.. இந்த இணையதளங்களில் காணலாம் !
10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in ,www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை காணலாம்.
பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 8ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிந்தது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர் மாணவியர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 39 ஆயிரத்து 741 பேரும் எழுதியுள்ளனர். அவர்களில் 25 ஆயிரத்து 769 பேர் மாணவர்கள்.

பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு தேர்வுத்துறை வெளியிடுகிறது. பத்தாம் வகுப்பு தேர்விலும் மாநில, மாவட்ட அளவிலான முதல் 3 இடங்களுக்கான பட்டியல் வெளியாகாது, கிரேடு முறையில் அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in ,www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியர் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி மாதம் வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு எழுதிய அனைத்து மாணவ,மாணவிகளின் செல்போன் எண்களுக்கும் அவர்களுடைய தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் வழியாக அனுப்பி வைக்கப்படும் புதிய முறை இந்தாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. தனித் தேர்வர்களும் செல்போனில் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றுகளை 25ம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்தந்த தேர்வு மையங்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications