ஆசிரியையுடன் ஓட்டம் பிடித்த 10ம் வகுப்பு மாணவனுக்கு வலை.. நெல்லை அருகே கொடுமை!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் 10 வகுப்பு மாணவன் ஒருவருடன் ஆசிரியை ஒருவர் எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கருப்பசாமி கோவில் பகுதியை சேர்ந்த சிவசுந்தரபாண்டியன் என்ற மாணவன் ஈ.விலக்கு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

Sslc student eloped with his lady teacher

மாணவன் சுந்தரும், செங்கோட்டை காலன்கரை பகுதியை சேர்ந்த கோதை லட்சுமி என்ற 26 வயதுடைய ஆசிரியை ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த காதல் விவகாரம் மாணவனின் பெற்றோருக்கு தெரிய வரவே, ஆசிரியையை கண்டித்துள்ளதோடு, மகனுக்கு அறிவுரையும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவன் சுந்தர் எழுதி வந்தார். கடந்த 31ஆம் தேதி தனது நண்பர்கள் வீட்டுக்கு சென்றுவருவதாக தனது தாயார் நாச்சியாரிடம் கூறிசென்றுள்ளார்.
அதன்பின் அவனை காணவில்லை இரவு வீட்டுக்கும் வரவில்லை இந்நிலையில் செங்கோட்டையை சார்ந்த ஆசிரியையும் தனது வீட்டில் தோழி ஒருவருக்கு திருமணம் நடப்பதாக கூறி சென்றுள்ளார் அவரையும் காணவில்லை.இதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியை, மாணவனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.

இது குறித்து மாணவனின் பெற்றோர் கடையநல்லூர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதில், தனது மகன் வீட்டிலிருந்த வங்கி ஏ.டி.எம்.கார்டை எடுத்துக் கொண்டு அதிலிருந்து ரூபாய் பத்தாயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.இந்நிலையில் மாணவன் காணாமல் போன சம்பவம் கூறித்து அன்றைய தினமே காணமல் போன ஆசிரியை வீட்டில் விசாரித்த போதுதான் அவரையும் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது.

26 வயதுடைய எம்.எஸ்.சி.படித்த ஆசிரியை ஒருவர் 16 வயதுடைய மாணவனுடன் ஓடிய சம்பவம் நெல்லை மாவட்டம், கடையநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் இந்த மாணவன் ஏற்கனவே பள்ளி நிர்வாகத்தால் பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும்,பெற்றோரை அழைத்துவந்து மன்னிப்பு கோரியதாகவும் ,சம்பவம் நடப்பதற்கு முன் சில மாணவர்களிடம் அந்த ஆசிரியையை தான் காதலிப்பதாகவும்,கூட்டிக் கொண்டு ஓடப்போவதாகவும் தெரிவித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவன் ஏற்கனவே 9ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு ஆசிரியையையும் காதலித்துள்ளான் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் காதலுக்கு கண்ணில்லை என்பார்களே அது இந்த மாதிரி அவலங்களை நினைக்கும் போது உண்மையாகத்தான் தோன்றுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+