ஜெ. மரணத்திற்கு சசிகலா குடும்பமே காரணம் என மக்கள் நினைக்கின்றனர் - ஸ்டாலின்
ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா குடும்பமே காரணம் என மக்கள் நினைக்கின்றனர் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா மற்றும் அவரது குடும்பமே காரணம் என மக்கள் நினைக்கின்றனர் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின்,கடந்த 9 மாத காலமாக தமிழகம் எந்த நிலையில் உள்ளது என்று மக்களுக்கு தெரியும்.

அண்ணா மருத்துவமனையில் இருந்த போது அரசு சார்பில் சிகிச்சை குறித்து அறிக்கை தரப்பட்டது. ஜெயலலிதா மறைவு என்ற தகவல் கூட குழப்பமான நிலையில் வெளியிடப்பட்டது. இதனிடையே சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை கழகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று பன்னீர்செல்வம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
அதற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் தன் பதவியை ராஜினாமா செய்தார். திடீரென்று ஒரு நாள் பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்த பிறகு வலுக்கட்டாயமாக என்னை ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்றார். சசிகலா குடும்பம் குறித்து 10 சதவிதம் மட்டும்தான் கூறினேன். 90சதவிதம் இன்னும் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். எனவே ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா மற்றும் அவரது குடும்பமே காரணம் என மக்கள் நினைக்கின்றனர் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications