யூகங்களை எழுப்பி கூட்டணியைக் கலைத்துவிடாதீர்கள்.. ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக யூகங்களை எழுப்பி கூட்டணியைக் கலைத்து விடாதீர்கள் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேமுதிக தனது கூட்டணியில் சேர்க்க ஆரம்பம் முதலே திமுக தீவிரமாக முயன்று வருகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஆரம்பித்த முயற்சி இது. அப்போது அது பலிக்கவில்லை. லோக்சபா தேர்தலின்போதும் முயற்சித்தது. அப்போதும் முடியவில்லை.

இந்த நிலையில் இப்போது சட்டசபைத் தேர்தலுக்கு எப்படியாவது தேமுதிகவை இழுத்து விடுவது என்பதில் திமுக படு தீவிரமாக உள்ளது. இதற்காக விஜயகாந்த்தை இழுக்க மிகக் கடுமையாக முயன்று வருகிறது திமுக. திமுகவினர் பலரும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் தேமுதிக தரப்பில் பேரம் பலமாக இருப்பதால் திமுகவின் முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா, இல்லையா என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஆனால் திமுக தரப்பில் 59 தொகுதிகளை தேமுதிகவுக்குத் தருவதாகவும், இந்தப் பேரம் முடிந்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் இதெல்லாம் வதந்தி என்று முதலில் விஜயகாந்த் கூறினார். பின்னர் அக்கட்சியின் இன்னொரு தலைவரான வி.சி.சந்திரகுமார் என்பவர், யாரும் செய்திகளை நம்ப வேண்டாம். விஜயகாந்த் யாருடனும் பேரம் பேசவில்லை. அவரே அறிவித்தால்தான் அது அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்று விளக்கி அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலினும் இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ளார். திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஸ்டாலினிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, கூட்டணி தொடர்பாக தலைவர் கருணாநிதி விரைவில் அறிவிப்பார். யூகங்களை எழுப்பி கூட்டணியை கலைத்து விட முயற்சி செய்ய வேண்டாம் கூட்டணி அமைந்து விடாமல் போக நீங்கள் காரணமாக இருந்து விடாதீர்கள் என்றார் ஸ்டாலின்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications