சட்டசபையில் மக்கள் பிரச்சினை பற்றி பேச அனுமதி மறுப்பு: வெளிநடப்பு செய்த ஸ்டாலின் புகார்
சென்னை: தர்மபுரி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மரணம், காவிரியில் தடுப்பணை, உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க சட்டசபையில் அனுமதிக்க மறுப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தங்கள் கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை என கூறி, தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

பின்னர் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், 'காவிரியின் குறுக்கே கர்நாடகா தடுப்பணை, ஆவின் பால் முறைகேடு, தருமபுரி குழந்தைகள் இறப்பு, முதியோர் உதவித் தொகை நிறுத்தம், டெங்கு காய்ச்சல் பரவுதல் என ஏராளமான முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். எனவே, கூட்டத் தொடரை 5 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம், ஆனால், சபாநாயகர் எங்கள் கோரிக்கை எதையும் ஏற்கவில்லை. அதனால் வெளிநடப்பு செய்துள்ளோம்,' என்றார்.

மேலும் அவர், தமிழ்நாட்டில் கொலை, கொள்ளைகள் பெருகிவிட்டன. பாலியல் பலாத்காரம் அதிகரித்துவிட்டது. சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்குலைந்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications