தேமுதிக, தமாகா உடைய வைகோ தான் காரணம்... மு.க.ஸ்டாலின் 'அட்டாக்'
சென்னை: தேமுதிக, தமாகா கட்சிகள் உடைவதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோதான் காரணம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் மு.க.ஸ்டாலின் 3-வது நாளாக சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அ.தி.மு.க. ஆட்சியால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலையை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகம் செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது:
தேமுதிகவை தொடர்ந்து தமாகாவில் இருந்தும் நிர்வாகிகள் வெளியேறுகிறார்கள். ஏற்கனவே தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததால் உடைந்தது. இப்போது தமாகா இணைந்ததும் அந்த கட்சியும் உடைய ஆரம்பித்துள்ளது.
ஆனால் கருணாநிதியும், ஸ்டாலினும் திட்டமிட்டு, ஏதோ பல கோடி ரூபாய் கொடுத்து அந்த கட்சியை உடைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று வைகோ சொல்லி கொண்டு இருக்கிறார்.
தமாகா, தேமுதிக இருந்தாலும் அவற்றை உடைப்பதற்கு யார் காரணம் என்று கேட்டால் என்னை பொறுத்தவரையில் வைகோ தான் காரணம். இந்த கட்சிகளை எல்லாம் அங்கு கொண்டு சென்று சேர்க்காமல் இருந்தால் அவை உடைந்திருக்காது. எனவே அவர்தான் அவற்றை உடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் என்பது என்னுடைய குற்றச்சாட்டு.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications