ஊழல் செய்யவில்லை என தாய் மீது சத்தியம் செய்ய தயாரா? ஜெ.வுக்கு - ஸ்டாலின் சவால் !
சென்னை: ஊழல் செய்யவில்லை என தாய் சந்தியா மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா சத்தியம் செய்யத் தயாரா என திமுக பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நாளை மறுநாள் மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்வடைய உள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் மீண்டும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். வீதி வீதியாக நடந்து சென்று மக்களிடம் வாக்கு சேகரித்து வரும் ஸ்டாலின், அதன் ஒரு பகுதியாக மாலையில் பூந்தமல்லி தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அதன் பின்னர் தாம்பரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆர்.ராஜாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் ஜெயலலிதா இந்த மாவட்டத்துக்கு வந்து குறைகளை கேட்டதுண்டா என கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழகத்தின் எந்த மாவட்டத்துக்கும் சென்று மக்கள் குறைகளை ஜெயலலிதா கேட்டதில்லை என்று தெரிவித்தார். மேலும், அவர் செல்வது ஒரே ஒரு மாவட்டம் தான் அது உங்களுக்கு தெரியும். தேர்தல் வந்துவிட்டதால் இப்போது மக்களைத் தேடி வருகிறார் ஜெயலலிதா என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் துப்புரவுப் பணியாளர் பணிக்கு தலா 1 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார். ஊழல் செய்யவில்லை என தாய் சந்தியா மீது ஜெயலலிதா சத்தியம் செய்யத் தயாரா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து சோழிங்கநல்லூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications