For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சத்தமா சொல்லுங்க. இன்னும் சத்தமா.. சவுண்டா சொல்லுங்க.. சவுண்டா சொல்லுங்க.. நன்றி!

|

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்துப் பிரசாரம் செய்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பேச்சை நிறைவு செய்தபோது ஜெயலலிதா பாணியில் கேள்விகளாக கேட்டு முடித்தார்.

நேற்று இரவு திருவண்ணாமலையில் பிரசாரம் செய்து பேசினார் ஸ்டாலின். திமுக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

பிரசார மேடையில் நின்றபடி உரையாற்றிய அவர் வழக்கம் போல செஞ்சீங்களா, நிறைவேற்றினீர்களா என்று கேள்விகளைக் கேட்டபடி பேசினார்.

அவரது பேச்சிலிருந்து...

தலைவிரித்தாடும் பிரச்சினை

தலைவிரித்தாடும் பிரச்சினை

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை தலைவரித்தாடுகிறது. ஆனால் அதெல்லாம் கண்டுக்கொள்ளாமல் கொடநாட்டில்ஓய்வு எடுத்தார் இந்த அம்மையார்.

நீங்க திருப்பிக் கேளுங்க

நீங்க திருப்பிக் கேளுங்க

ஆனால் பிரச்சாரத்தில் என்னை ஜெயிக்க வைப்பீர்களா... ஜெயிக்க வைப்பீர்களா... என கேட்கிறார். நீங்கள் எங்களுக்கு என்ன செய்தீர்கள் என திருப்பிகேளுங்கள்.

செஞ்சீங்களா...

செஞ்சீங்களா...

சட்டமன்ற தேர்தலின் போது, முதியோர்களுக்கு இலவச பேருந்து பாஸ் வழங்கப்படும் என்றார். செஞ்சீங்களா... குன்னூரில் தமிழக அரசு வீடு வழங்கும் திட்டத்தில் ஒரு கோடீஸ்வரர்க்கு இலவச வீடு வழங்கினார்.

ஏழைகளுக்கு வீடு கொடுத்தவர் கருணாநிதி

ஏழைகளுக்கு வீடு கொடுத்தவர் கருணாநிதி

கலைஞர் ஆட்சியில் இருக்கும் போது ஏழை மக்களுக்குவீடு வழங்கினார். இவர் அதிமுகவினருக்கு, கோட்டீஸ்வரர்களுக்கு வீடு வழங்கினார். இதுதான் இந்த ஆட்சியில் மக்களுக்கு நடக்கும் அவலம்.

கோவிலை மீட்டவர் கருணாநிதி

கோவிலை மீட்டவர் கருணாநிதி

திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயில் தொல்பொருள் துறை கையகப்படுத்த நினைத்து பணிகள் செய்தபோது 2004 தேர்தலில் இதே இடத்தில் பிரச்சாரம் செய்த தலைவர் கலைஞர் அவர்கள், எங்கள் வேட்பாளரை வெற்றி பெறவைத்தால் அண்ணாமலையார் கோயிலை மீட்டு தருகிறேன் என வாக்குறுதி தந்தார். நீங்கள் வெற்றிபெற வைத்தீர்கள். கலைஞர் கோயிலை மீட்டு தந்தார்.

இதோ இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்

இதோ இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்

ஜெயலலிதா சிலதினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு வந்தபோது இரும்புதாதுவெட்டியெடுக்கும் திட்டம் தடுத்து நிறுத்தப்படும் என்றார். இதோ இந்த புகைப்படத்தை பாருங்கள். அந்த நிறுவன பிரதிநிதிகளோடு சிரித்து பேசிக்கொண்டு ஒப்பந்தம் போடுகிறார். இவரா அதைதடுத்து .

தடுத்து நிறுத்துவோம்

தடுத்து நிறுத்துவோம்

காலையில் நான் திருவண்ணாமலைவந்துவிட்டேன். என்னை வந்து சந்தித்த கவுத்திமலை - வேடியப்பன் மலை பாதுகாப்பு குழு நிர்வாகிகள், கவுத்திமலை, வேடியப்பன் மலையில் உள்ள இரும்புதாது வெட்டி எடுக்க தனியார்நிறுவனம் முயல்கிறது. அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் 20க்கு மேற்பட்ட கிராமங்கள் காலி செய்யப்படும் நிலை ஏற்படும் என்றார்கள். எங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றால் அந்ததிட்டம் நிச்சயம் தடுத்து நிறுத்தப்படும் என்றார் ஸ்டாலின்

செம கூட்டம்

செம கூட்டம்

ஸ்டாலின் கூட்டத்திற்குப் பெருமளவில் கூட்டம் திரண்டிருந்தது. கட்சியினரோடு பெண்களும் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர்.

சவுண்டா சொல்லுங்க

சவுண்டா சொல்லுங்க

தனது பேச்சை நிறைவு செய்யும்போது ஸ்டாலின் கூடியிருந்தோரைப் பார்து, உங்களது வேட்பாளர் அண்ணாமலையை வெற்றி பெறச் செய்வீர்களா என்று கேட்டார். அதற்கு கூட்டத்தினர் செய்வோம் என்றனர். அதையடுத்து ஸ்டாலின், சத்தமா சொல்லுங்க என்றார், பின்னர் இன்னும் சத்தமா சொல்லுங்க என்றார். பிறகு சவுண்டா சொல்லுங்க என்றார்.. பிறகு இன்னும் சவுண்டா என்றார். அதன்பிறகு நன்றி என்று கூறி பேச்சை முடித்தார்.

English summary
DMK leader M K Stalin garnered support in Thiruvannamalai in support of DMK candidate Annamalai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X