அப்படிப்பட்ட முதல்வர் பதவிக்கு நான் வரவேண்டுமா? ஸ்டாலின் திடீர் கேள்வி
மத்திய அரசின் பினாமி அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்று திமுக செயல் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை: யார் யாரோ முதல்வர் பதவிக்கு வந்து செல்வதால் நானும் முதல்வராக வேண்டுமா என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலி்ன் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் பாத்தம்பட்டியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடி வரும் பொதுமக்களை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடும் மக்களுக்கு திமுக துணை நிற்கும். முதல்வர் பதவிக்கு நான் வர வேண்டுமா என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஏனேனில் முதல்வர் பதவிக்கு யார் யாரோ வந்து செல்வதால் எனக்கும் அந்த எண்ணம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது என்றும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக இல்லை எனவும் மத்திய அரசின் பினாமி அரசாக தமிழக அரசு இயங்கி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மத்திய அரசு கொண்டு வரும் திட்டத்திற்கு, மாநில அரசு மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதாக குற்றம்சாட்டினார். மாநில அரசு உறுதிமொழி எதையும் நிறைவேற்றவில்லை எனவும் ஸ்டாலின் கூறினார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளை முதலமைச்சர் நேரில் சென்று இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை செயல்படுத்தினால் திமுகவும் போராட தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications