இன்னும் எத்தனை பிணங்களின் மீது ஜெ. பிரச்சாரம் மேற்கொள்ளப் போகிறார்?: ஸ்டாலின் வேதனை
விழுப்புரம்: மக்கள் நலனைச் சிந்திக்காமல், தனது வசதிக்காக வெயில் சுட்டெரிக்கும் பகல் நேரங்களில் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தி, உயிரிழப்புகளுக்கு காரணமாகும் ஜெயலலிதா இன்னும் எத்தனை பிணங்களின் மீது பிரச்சாரம் மேற்கொள்ளப் போகிறார் என திமுக பொருளாளர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட வானூர், மயிலம், கள்ளக்குறிச்சி, விக்கிரவாண்டி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-

வெயிலில் பலி...
சேலத்தில் ஜெயலலிதா பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் இரண்டு பேர் இறந்திருக்கிறார்கள். கூட்ட நெரிசலில் சிக்கி அவர்கள் இறக்கவில்லை. வெயில் கொடுமையால் இறந்திருக்கிறார்கள். வானிலை மையம் வெயில் எந்தளவுக்கு இருக்கிறது, யாரும் வெளியில் வர வேண்டாம் என்று எச்சரிக்கை செய்திருக்கிறது. ஆனால் இந்த அம்மையார் 2 மணிக்கு பிரச்சாரத்திற்கு வருகிறார்.

தடியடி வேறு...
இவர் 2 மணிக்கு வருவதற்கு காலையில் 9, 10 மணிக்கே காசு கொடுத்து, வேறு எதை எதையோ கொடுத்து மக்களை கொண்டு வந்து கூட்டத்தை கூட்டுகிறார்கள். இடையில் அவர்கள் எழுந்து சென்று தண்ணீர் கூட குடிக்க விடாமல் போலீசார் தடியால் அடித்து இருக்கிறார்கள். காரணம் அங்கு ஏற்கனவே பாதி சேர்கள் காலியாக உள்ளதால் மேலும் கூட்டம் கலைந்து போய் விடக்கூடும் என்பதால் அவர்களை வெளியேற விடாமல் தடுத்து அடைத்து வைத்திருக்கிறார்கள்.

காரணம் இது தான்...
ஆக, இவர் பேசிவிட்டு சென்று விடுகிறார். ஏன் 2 மணிக்கு கூட்டம் நடத்த நேரத்தை தேர்ந்தெடுக்கிறார் என்பதை நீங்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். மாலை 5 மணிக்கெல்லாம் ஹெலிகாப்டர் சென்னைக்கு சென்று இறங்கி விட வேண்டும். சூரியன் இருக்கும் போதுதான் ஹெலிகாப்டரை இறக்க முடியும். சூரியன் மறைந்த பிறகு அதை கீழே இறக்க முடியாது.

ஜெ. வசதிக்காக...
ஆக, அவரது வசதிக்காக 2 பேர் விருத்தாச்சலத்தில் இவர்கள் இரண்டு பேர் இறந்த பிறகாவது அந்த அம்மையாருக்கு புத்தி வந்ததா என்றால் இல்லை. இன்றைக்கு சேலத்தில் இருவர் இறந்துள்ளனர். இதைவிட ஒரு கொடுமை என்ன என்று கேட்டால், ஒரு பெண் போலீஸ் அதிகாரி, அவரது பெயர் கற்பகம், பொதுக்கூட்டத்தில் வெயில் கொடுமை தாங்கமுடியாமல் மயக்கமடைந்து உயிருக்கு போராடக் கூடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

தொடரும் உயிர்பலி...
உச்சி வெயிலில் பிரச்சாரக்கூட்டம் நடத்துவதால் உயிர்பலி தொடர்ந்து நடந்துக்கொண்டு இருக்கிறது. இன்னும் எத்தனை பிணங்களின் மீது ஜெயலலிதா பிரச்சாரம்மேற்கொள்ளப் போகிறார். இதைவிட கொடுமை வேறு என்ன நடக்க வேண்டும். மனித உயிர்களுக்கு எந்தளவு மதிப்பு கொடுக்கிறார்கள் என்று தயவுசெய்து நீங்கள் சிந்திக்க வேண்டும். போலீசாரும் இவரால் தொல்லை அடைந்துள்ளனர். அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே ? மனித உரிமை மீறல் இல்லையா இது ? ஆக மக்களைப் பற்றி சிந்திக்காத ஒரு முதலமைச்சர் உங்களுக்குத் தேவையா ? மக்களைப் பற்றி எண்ணிப்பார்க்காத ஒரு ஆட்சி நமக்குத் தேவையா?

அதிசயம்...
தமிழகத் தேர்தல் களத்தில் இன்று ஒரு அதிசயம் நடந்துள்ளது. தமிழகத்தில்நின்றுக்கொண்டு கேரள மக்களிடம் ஜெயலலிதா வாக்கு கேட்கிறார். சேலம் மாவட்டத்தில்குளிரும் மேடையில் அமர்ந்துக்கொண்டு கேரள அதிமுக வேட்பாளர்களுக்காக வாக்கு கேட்கும் ஒரு விநோதமான தலைவி தான் ஜெயலலிதா.

பழி வாங்கும் கூட்டம்...
ஆட்சியையும், சட்டசபையையும் கேலி கூத்தாக்கிய ஜெயலலிதாதற்போது தேர்தல் பிரச்சார கூட்டத்தையும் கேலிகூத்தாக்கி விட்டார். ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்இன்றைக்கு பழிவாங்கும் கூட்டமாக மாறிவிட்டது.

அம்மா புளுகு...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது என்று ஜெயலலிதாவைவிட நகைச்சுவையாக யாரும் கூறிவிட முடியாது. அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்பதெல்லாம் தாண்டி அம்மா புளுகு ஒன்றை ஜெயலலிதா பேசிவிட்டு சென்றிருக்கிறார்.

பதில் தேவை...
ஏற்கனவே விஷ்ணுபிரியா என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண் போலீஸ் அதிகாரி திருச்செங்கோட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இப்போது ஒரு பெண் போலீஸ் அதிகாரி மயக்கமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். ஆக, இந்த கொடுமைகளுக்கு எல்லாம் இந்த தேர்தல் முடிந்த பிறகு, இந்த ஆட்சி முடிந்து திமுக ஆட்சி வந்த பிறகு ஜெயலலிதா பதில் சொல்லியே தீர வேண்டும்" என இவ்வாறு அவர் உரையாற்றினார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications