திமுக ஆட்சிக்கு வந்தால் பத்திரிக்கையாளர் நலவாரியம்: மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்கப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேஸ்புக்கில் அவர் பதிவு செய்துள்ளதாவது:
ஜனநாயகம் வழங்கியுள்ள மிகப் பெரிய உரிமைகளில் ஒன்று பத்திரிகை சுதந்திரம். அந்த சுதந்திரம் பாதுகாக்கப்படும்போதுதான் ஜனநாயகத்தின் தூண்கள் உறுதியாக இருக்கும். உலக நாடுகளில் பத்திரிகை சுதந்திரம் போற்றிப் பாதுகாக்கப்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பத்திரிகை சுதந்திரம் என்ன பாடுபட்டது என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை விமர்சித்து கட்டுரை வெளியிட்டால், செய்திகளை ஒளிபரப்பினால் அவதூறு வழக்குகள் அடுக்கடுக்காகப் பாய்ந்ததை அறிவோம். பல்வேறு ஏடுகள் மீதும் பல தொலைக்காட்சி ஊடகங்கள் மீதும் ஜெயலலிதா அரசு போட்ட அவதூறு வழக்குகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேலானதாகும்.
செய்தி வாசிப்பாளர் மீது அவதூறு வழக்கு போட்ட கொடுமையும்கூட தமிழகத்தில்தான் நடந்தது. கருத்து சுதந்திரத்தை காலில் போட்டு நசுக்கும் இந்த சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டும் நாள் நெருங்கிவிட்டது. தி.மு.கழக அரசு அமைந்ததும் பத்திரிகையாளர் நலனையும் அவர்களின் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் வகையிலான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
திமுக தேர்தல் அறிக்கையிலும் அதற்கான வாக்குறுதியைத் கருணாநிதி வழங்கியிருக்கிறார். பத்திரிகையாளர்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்பதுடன் பத்திரிகையாளர் நல வாரியமும் அமைக்கப்படும் என்ற உறுதிமொழி நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்து, ஊடகத்துறையினரின் சுதந்திரம் என்றென்றும் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்து, அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
மக்களின் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு கால்ஷீட் எப்போது? சவடால் விட்டீங்களே?விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி












Click it and Unblock the Notifications