கருணாநிதி பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தொண்டர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதாவது: தமிழினத் தலைவர் கருணாநிதியின் 93 வது பிறந்த நாள் திமுகவின் வரலாற்றில் மிக முக்கியமான நாள். ஒவ்வொரு கழகத் தொண்டர்களின் உணர்வோடு பின்னிப் பினைந்த நாள். கழகத் தொண்டர்கள் அனைவரும் தங்களின் இல்ல விழாவாக கொண்டாடி மகிழும் நாள் என்பதை நானறிவேன்.

தமிழக மக்களின் நலனுக்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைவரின் அரிய மக்கள் சேவையை நினைவு கூர்ந்து நாம் அனைவரும் அவரது பிறந்த நாளை இதய பூர்வமாக கொண்டாடி வருகிறோம். ஆகவே நமக்கு எல்லாம் ஒப்பற்ற தலைவராக இருக்கும் அவரின் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் அணி தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆங்காங்கே மரக்கன்றுகள் நட்டும், ரத்த தானம் செய்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடும் படி அனைவரையும் கேட்டு கொள்கிறேன்.
தமிழினத்திற்காக, அடித்தட்டு மக்களுக்காக சீர் மிகு சேவையாற்றிக் கொண்டிருக்கும் கருணாநிநி மேலும் பல்லாண்டு வாழ்ந்து தமிழன் தலைநிமிர தன் பணியைத் தொடரும் வகையில் இளைஞர் அணியின் கொண்டாட்டம் இருக்க வேண்டும் என்று இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications