மேலாண்மை வாரியம் அமையாவிடில் அரசு கிளர்ந்தெழும் என நம்புகிறேன்... ஸ்டாலின் செம பாயிண்ட்!
காவிரி மேலாண்மை வாரியம் அமையாவிடில் அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள் என நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : மார்ச் 29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்பட மாட்டாது என்றும், அப்படி அமையாத பட்சத்தில் அதிமுக எம்பிகள், எம்எல்ஏக்கள் மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுவார்கள் என்று நம்புவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற மண்டல மாநாட்டை முடித்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாரை தப்படைகள் மேளம் முழங்க ஈரோடு மாநாட்டை வெற்றி மாநாடாக்கியதற்காக சிறப்பான வரவேற்பு தரப்பட்டது. மேள தாள வரவேற்புகளால் சென்னை விமான நிலையமே அதிர்ந்தது.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது : திமுக தான் நிச்சயம் அடுத்தது ஆட்சிக்கு வரும். அரசியல் விமர்சகர்களும், ஊடக விவாதங்களில் பங்கேற்பவர்களும் தமிழகத்தில் வெற்றிடம் வந்துவிட்டதாக தொடர்ந்து சொல்லி வருவதை நாம் பார்க்கிறோம்.
ஈரோடு மண்டல மாநாட்டை பார்த்தபிறகாவது வெற்றிடம் என்று சொல்லிக்கொள்வதை மாற்றுவார்கள் என்று நம்புகிறேன். காவிரிமேலாண்மை வாரியம் அமைக்கப்படுகிறதா என்று மார்ச் 29 வரை பொருத்திருந்து பார்க்கலாம் என்று சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார்.
ஓபிஎஸ்ஸே இப்படி வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். நிச்சயமாக நான் சொல்கிறேன், 29ம் தேதிக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது, அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடப் போவதில்லை. எனவே குதிரை பேர ஆட்சி நடத்திக்கொண்டிருக்கக்கூடிய அரசு உடனே மத்திய அரசை எதிர்த்து கிளர்ந்து எழும் என்று எதிர்பார்க்கிறேன். அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிகள் உடனடியாக மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுவார்கள் என்று நம்புவதாக ஸ்டாலின் கூறினார்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications