தூத்துக்குடிக்கு விரைகிறார் ஸ்டாலின்.... குமாரசாமி பதவியேற்பில் பங்கேற்கவில்லை!
தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். தலைமைச் செயலரை அவர் நேரில் சந்தித்தார்.
Recommended Video

சென்னை: தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் தலைமைச் செயலரை நேரில் சந்தித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்த நிலையில், தூத்துக்குடிக்கு நேரில் சென்று பார்வையிட உள்ளதால், கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று அவர் கூறினார்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன் விவசாயம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மூச்சுத்திணறல், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் கூறி கடந்த 3 மாதங்களுக்கு மேலாக அந்த நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட மக்கள் பேரணியாக சென்றனர். அதை போலீசார் தடுத்து நிறுத்தி, தடியடி நடத்தினர்.
அதையடுத்து பொதுமக்கள் ஆத்திரமடைந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தடுப்பதற்காக போலீசார் இரண்டு இடங்களில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 3 பெண்கள் உள்பட 10 பேர் பலியாயினர்.
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்துக்கு சென்று தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்தார். அப்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த இடங்களைப் பார்வையிட தூத்துக்குடிக்கு செல்கிறார் ஸ்டாலின். அதனால், கர்நாடகா முதல்வராக குமாரசாமி நாளை பதவியேற்கும் விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications