மக்கள் தேமுதிக வந்தால் அவர்களைச் சந்திக்க கருணாநிதி தயார்... ஸ்டாலின்
சென்னை: மக்கள் தேமுதிக திமுகவிடம் வந்தால் அவர்களைச் சந்திக்க திமுக தலைவர் கருணாநிதி தயாராக இருக்கிறார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேமுதிக உடைந்து விட்டது. வி.சி.சந்திரகுமார் தலைமையில் புதிய அணி உருவாகியது. அந்த அணி தற்போது மக்கள் தேமுதிக என்ற பெயரில் தனி இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.
இந்தக் கூட்டணி திமுக கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதை வலுப்படுத்துவது போல மக்கள் தேமுதிக எங்களிடம் வந்தால் அவர்களைச் சந்திக்கத் தயார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில், மக்கள் தேமுதிக, திமுகவிடம் வந்தால் அவர்களைச் சந்திக்க கருணாநிதி தயாராக இருக்கிறார் என்றார் ஸ்டாலின்.
ஸ்டாலினுக்கு அவர்தான் எதிரி என்று விஜயகாந்த் சொல்லியுள்ளாரே என்ற கேள்விக்கு அவருக்கு நான் எதிரி இல்லை என்பதையே விஜயகாந்த் சொல்லியுள்ளார் என்றார் ஸ்டாலின்.
திமுக தேர்தல் அறிக்கை குறித்த கேள்விக்கு, மக்களின் கருத்துக்கள், எதிர்பார்ப்புகளை அறிந்து அதன்படி தயாரிக்கப்பட்டுள்ளது திமுக தேர்தல் அறிக்கை. இதை பாமகவினுடையது என்று டாக்டர் ராமதாஸ் கூறுவது தேவையற்றது என்றார் ஸ்டாலின்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications