ஜெ. பாணியில் ஸ்டாலின்! தனி விமானம் தயார்! 20 ஸ்பாட் ரெடி! ஏப் 7 தரமான சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

மக்களவையின் பதவிக்காலம் வரும் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆகவே நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்தத் தேர்தலில் நாடு முழுவதும் 10.50 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த 2 நாள்கள் முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்

Stalin is campaigning by private plane

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் ஒரே கட்டமாக வரும் ஏப்.19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு ஈடு கொடுக்கும் கட்சியாக திமுக மட்டுமே உள்ளது.

அந்தக் கட்சி சொல்லப்போனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாகவே தயாராகி விட்டது. கடந்த நவம்பர் மாதமே வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மாநாட்டை நடத்திவிட்டது.

எப்படி கள்ள ஓட்டுகளைத் தடுப்பது? டிஜிட்டல் முறையில் எந்தளவுக்கு அலர்ட் ஆக இருப்பது? தொழில் நுட்ப உதவியுடன் மக்களை எப்படி வீடு வரவேற்பறை சென்று சேர்வது? எனப் பல திறமைகளைத் தனது வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்குப் பயிற்சி கொடுத்து தயார்ப்படுத்திய ஒரே கட்சி திமுகதான்.

Stalin is campaigning by private plane

அதிமுக, பாஜக உட்பட வேறு கட்சிகள் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு என்று பயிற்சி வகுப்பு எல்லாம் நடத்தியதைப் போன்று தெரியவில்லை.

ஸ்டாலினின் உடல்நிலை சரியில்லை என்று பல நேரங்களில் வதந்திகள் பரப்பிவிடப்பட்டாலும், களத்தில் என்னவோ ஸ்டாலின்தான் முதல் ஆளாக நிற்கிறார்.அவரது தலைமையிலான திமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடித்து இப்போது தொகுதிப் பங்கீட்டையும் முடிக்க உள்ளது.

இந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் ஸ்டாலினை உடல்நிலை காரணமாக 6 நாள்கள் மட்டுமே ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள். அப்படியும் கேட்காமல், அவர் கம்மிய குரலுடன் காணொலி காட்சி மூலம் சென்னை மண்டல திமுக பயிற்சிப் பாசறை கூட்டத்தில் பங்கேற்றார்.

Stalin is campaigning by private plane

அதன்பிறகு வழக்கம் போல் அவரது நடவடிக்கை இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டது. தனது செயல்பாட்டால் வதந்திகளுக்கு வாய்ப் பூட்டுப் போட்டுவிட்டார் மு.க.ஸ்டாலின்.
மற்ற எந்தக் கட்சிகளைவிட மக்களவைத் தேர்தல் என்பது திமுகவை பொறுத்தளவில் ஒரு திருவிழா. காரணம், ஆளும் கட்சியாக உள்ள திமுக கடந்த முறை வென்ற தொகுதிகளைவிடக் கூடுதலாக வென்று காட்டவேண்டிய தேவை இருக்கிறது.

Stalin is campaigning by private plane

ஆகவே, எதிர்க் கட்சிகளான அதிமுக உட்பட இந்தத் தேர்தல் களத்தில் பெரிய அளவுக்கு இதுவரை வேகம் காட்டவில்லை. கூட்டணி அமைப்பதில் ஒரு பக்கம் சிக்கல், இன்னொரு பக்கம் கட்சி சின்னம் என்ன ஆகுமோ என்று அச்சம் எனத் தேக்க நிலையில் உள்ளது அதிமுக.

ஆனால், பாஜக அப்படி அல்ல. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே தமிழ்நாட்டை மையமாக வைத்து தனது பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார் மோடி. அவர் இந்த ஒரு மாதத்திற்குள் அடிக்கடி தமிழக மக்களைச் சந்தித்துவிட்டார்.

Stalin is campaigning by private plane

கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை மார்ச் 20 அன்று திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரிலிருந்து ஆரம்பித்தார் மு.க.ஸ்டாலின். அந்தப் பயணத்தின் போது அவர் நேரடியாக மக்களைச் சந்தித்து, உரையாடி செல்ஃபி எல்லாம் எடுத்து வாக்குகளைச் சேகரித்தார். அந்தளவுக்கு இந்த முறை அவரது பிரச்சாரம் எல்லா ஊர்களையும் மையமாக வைத்து திட்டம் அமைக்கப்படாது என்றே திமுக தரப்பு செய்திகள் சொல்கின்றன.

ராகுல் காந்தியின் நியாய யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்கு மும்பை புறப்படுவதற்கு ஒருநாள் முன்னதாகவே, அமைச்சர் நேருவுடன் தனிமையில் தேர்தல் பிரச்சார பயணம் திட்டங்கள் குறித்து உரையாடி சில முடிவுகளையும் எடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

Stalin is campaigning by private plane

இந்த முறை அவர் ரயில் பயணத்தை முற்றாகத் தவிர்க்க இருக்கிறார். தரைவழி பயணம் என்பது அரிதாகவே இருக்கும். அனைத்து மாவட்டங்களுக்கு அவர் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் செல்ல திட்டமிட்டுள்ளார். அப்படியே பிரச்சார பயணத் திட்டத்தை வகுக்கும் படி நேருவை அறிவுறுத்தி உள்ளார் ஸ்டாலின்.

அதாவது 2 தொகுதிக்கு 1 பொதுக்கூட்டம் என்பது அவரது கணக்கு. அப்படிப் பார்த்தால் 40 தொகுதிகளுக்கு 20 பொதுக்கூட்டங்களை மிகப் பிரம்மாண்டமாக நடத்தத் திமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

முதல் கூட்டம் நேருவின் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. திமுக அடிக்கடி சொல்லும் ஒரு வாசகம், 'திருச்சி என்றால் திருப்புமுனை' என்பது. ஆகவே மார்ச் 22 ஆம் தேதி திருச்சி அருகே உள்ள சிறுகனூரில் முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

Stalin is campaigning by private plane

திருச்சிக்கு அருகேதான் பெரம்பலூர் உள்ளது. அந்தத் தொகுதியில் அமைச்சர் நேருவின் மகன் வேட்பாளராகக் களம் காண்கிறார். கிட்டத்தட்ட அது உறுதியான செய்தி. தனது 20 நாள்கள் பிரச்சாரத்தின் தொடக்கமாக நேருவின் மகனைப் பிரச்சாரத்திலிருந்து தொடங்க உள்ளார் ஸ்டாலின்.

அதன்பின்னர் ஏப்ரல் 7 ஆம் தேதி இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில், சோனியா காந்தி முதல் அரவிந்த் கெஜ்ரிவால் வரை, தேஜஸ்வி முதல் அகிலேஷ் யாதவ் வரை இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்பதுதான் ஹைலைட் நியூஸ்.

அந்த மேடையில் தங்கள் கூட்டணிக்கு யார் பிரதமர் என்பதையும் ஸ்டாலின்தான் ஓபன் செய்யப் போகிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+