ஓய்வுக்காக குடும்பத்துடன் லண்டன் சென்றார் மு.க.ஸ்டாலின்
சென்னை: தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், தன் குடும்பத்தினருடன் ஓய்விற்காக லண்டன் சென்றுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 10 நாட்களில் அவர் சென்னை திரும்பி, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிர கவனம் செலுத்துவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே, கேரளா அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் முடிவடைந்ததும், இரவு சென்னை திரும்பினார்.

ஞாயிறன்று மு.க ஸ்டாலின், 'பிரிட்டிஷ் ஏர்வேஸ்' விமானம் மூலம் லண்டன் பயணப்பட்டார். அவருடன், மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் சென்றனர். ஓய்விற்காக தனிப்பட்ட பயணமாக, ஸ்டாலின் லண்டன் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கடந்த ஒரு ஆண்டுகளாகவே நமக்கு நமே பயணம், தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், தேர்தலில் 89 இடங்களில் வெற்றி பெற்று பலமான எதிர்கட்சியான பின்னர் சட்டசபை எதிர்கட்சித்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் ஓய்விற்காக தற்போது ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் லண்டன் பயணப்பட்டுள்ளார். 10 நாட்களில் அவர் சென்னை திரும்பி, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிர கவனம் செலுத்துவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications