அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன: ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தி.முக. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தின் மூலம் பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சோளிங்கநல்லூரில் ஐ.டி. ஊழியர்களுடன் கலந்துரையாடலில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியது: அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த பாடில்லை. இந்த நான்கேமுக்கால் வருடத்தில் 4769 கற்பழிப்பு குற்றங்கள் நடைபெற்றுள்ளன. 21 ஆயிரத்து 427 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடந்துள்ளன. டெல்லியில் நிருபயா கற்பழிப்பு சம்பவத்திற்கு பிறகு திடீரென்று முதல்வர் ஜெயலலிதா "13 அம்சத் திட்டம்" ஒன்றை அறிவித்தார்.
பெண்கள் பாதுகாப்பு குறித்த திட்டம். நம் முதல்வர் எப்போதுமே அறிவிப்பதில் ஹீரோ. ஆனால் செயல்படுத்துவதில்தான் ஜீரோ. அப்படித்தான் தொழில்துறை சம்பந்தப்பட்ட 110 அறிவிப்புகளாக இருந்தாலும் இருக்கிறது.
ஐ.டி. பற்றிய 110 அறிவிப்பாக இருந்தாலும் இருக்கிறது. அந்த வகையில் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் உள்பட அனைவருக்கும் பாதுகாப்பு பற்றி அறிவிக்கப்பட்ட அந்த 13 அம்சத் திட்டம் அப்படியே கிடக்கிறது. 13 அம்ச திட்டம் அறிவித்த பிறகுதான் பெண்களுக்கு எதிராக 21 ஆயிரம் குற்றங்கள் நடந்துள்ளன. 4769 கற்பழிப்புகள் நடந்துள்ளன. திமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்களின் பாதுகாப்பு முதலில் உறுதி செய்யப்படும்.
அதே போல் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்பவும், பாதுகாப்பான சூழலில் பணிக்கு வரவும் சீரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஸ்டாலின் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications