தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது? ஸ்டாலின் விளக்கம்
சென்னை: காங்கிரஸ் கட்சியில் குழு அமைக்கப்பட்டதும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார் ஸ்டாலின். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம்:

கேள்வி: திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும்?
பதில்: தொகுதிப் பங்கீடு குறித்து பேச திமுகவில் ஏற்கனவே குழு அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தரப்பில் இன்னும் குழு அமைக்கப்படவில்லை. அவர்கள் குழு அமைத்தவுடன் விரைவில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி விரைவில் அறிவிப்பார்.
கேள்வி:தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்?
பதில்: தேர்தல் அறிக்கை முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் வெளியிடப்படும்.
கேள்வி: உடுமலைப்பேட்டையில் பொறியியல் கல்லூரி மாணவர் கெளரவக் கொலை செய்யப்பட்டுள்ளாரே?
இதுபற்றி போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவிடம்தான் கேட்க வேண்டும். ஏனென்றால் காவல்துறை அவரிடம்தான் உள்ளது. தமிழகத்தில் கெளரவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன.
கேள்வி: கெளரவக் கொலையைக் கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படுமா?
திமுக நிர்வாகிகளிடம் வரும் 21-ஆம் தேதி கலந்து பேசி போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications