ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதை ஆட்சியாளர்களுக்கு இல்லையே!...ஸ்டாலின் கண்டனம்
நீட் தேர்வை எதிர்த்து போராட அனுமதிக்காததால் தன்னுடைய பணியை புறக்கணித்த ஆசிரியை சபரிமாலாவின் உணர்வை மதிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை : ஆசியைப் பணியைத் துறைந்த சபரிமாலாவின் உணர்வுக்கு மதிப்பளிப்போம் என்றும் ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதைகூட ஆட்சியாளர்களுக்கு இல்லையே என் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் ஒரே கல்வி முறையை வலியுறுத்தி விழுப்புரம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியின் ஆசிரியை சபரிமாலா தன்னுடைய ஏழு வயது மகனுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் அரசு ஊழியர் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று சொன்னதால், அதிருப்தியடைந்த சபரிமாலா இன்று தன்னுடைய ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆசிரியை என்ற முறையில் தன்னுடைய சமூக கோபத்தைக் கூட வெளிப்படுத்த உரிமை இல்லாத போது தனக்கு பணி முக்கியமல்ல தேசம் தான் முக்கியம் என்று சபரிமாலா தன்னுடைய பணியை ராஜினாமா செய்வதாக மாவட்ட கல்வி அதிகாரியிடம் கடிதம் அளித்தார். இந்நிலையில் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
நீட்டை எதிர்த்து ஆசிரியை சபரிமாலா ராஜினாமா:அவரது உணர்வை மதிப்போம்.ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதைகூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே! pic.twitter.com/nRZRp5YvA7
— M.K.Stalin (@mkstalin) September 7, 2017
"நீட்டை எதிர்த்து ஆசிரியை சபரிமாலா ராஜினாமா:அவரது உணர்வை மதிப்போம்.ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதைகூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே!" என்று ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications