தூத்துக்குடியில் நடந்தது போல சேலம் மக்கள் போராட்டத்தில் நடந்துவிடக்கூடாது : ஸ்டாலின் எச்சரிக்கை
தூத்துக்குடியில் நடந்தது போல சேலம் மக்கள் போராட்டத்தில் நடந்துவிடக்கூடாது : ஸ்டாலின் எச்சரிக்கை
Recommended Video

சென்னை : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்றது போல துன்பியல் சம்பவம் சேலம் மக்கள் போராட்டத்தில் நடந்துவிடக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
சென்னை - சேலம் 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு சேலத்தில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

சேலம் - சென்னை இடையே பசுமை வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக இந்த சாலை சென்னை வந்தடையும்படி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை அமைக்கும் பணிகளுக்காக 8 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால், விவசாய நிலங்கள், வனப்பகுதி, ஆறுகள் பாதிக்கப்படும் என்றும், 150 கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக இந்த திட்டத்திற்கு சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களின் கிராமங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.இதில் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடி வந்த சிலரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதனால், போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்கிற கோஷத்தை முன் வைத்து போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தூத்துக்குடி போராட்டத்தில் நடைபெற்றது போல சேலம் மக்கள் போராட்டத்தில் எந்த வித தவறும் நடந்துவிடக்கூடாது. எனவே, இதுகுறித்து தமிழக அரசு உரிய பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications