விரும்பும் மதத்தைப் பின்பற்ற மனிதர்களுக்கு உரிமை உண்டு! தமிழக சட்டசபையில் ஸ்டாலின் பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரும்பும் மதத்தைப் பின்பற்ற மனிதர்களுக்கு உரிமை உண்டு என முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில் பேசியிருக்கிறார்.

கிறித்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு, அரசியல் சட்ட சமூகநீதி உரிமைகள் வழங்குவது பற்றி பேசிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், சட்டசபையில் ஸ்டாலின் பேசியதாவது;

''மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் சாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல. (மேசையைத் தட்டும் ஒலி) இத்தகைய சாதி என்பது நீ வேறு: நான் வேறு என்பதாக இல்லாமல், நான் உயர்ந்தவன்: நீ தாழ்ந்தவன் என்ற முறையில் இருக்கிறது.

Stalin says, people have the right to follow the religion of their choice

அதாவது படுக்கைக் கோடாக இல்லாமல், செங்குத்துக் கோடாக இருக்கிறது. மொத்தத்தில் அது சமூகக் கேடாக அமைந்துள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி)

சாதிய ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே சாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம்தான் சமூகநீதித் தத்துவம். (மேசையைத் தட்டும் ஒலி)

இந்த சமூகநீதித் தத்துவத்தை அனைத்து வகையிலும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசினுடைய நோக்கம். (மேசையைத் தட்டும் ஒலி)

அந்த வகையில் கிறித்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், அரசியல் சட்ட சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதெல்லாம். 1996. 2006. 2010. 2011 ஆகிய காலக்கட்டங்களில் இதே கோரிக்கையினை நிறைவேற்ற பிரதமருக்கு வலியுறுத்தியிருக்கிறார்.''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+