For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7 ஆண்டுகள் என்ன, ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க தயார்... ஆளுநருக்கு ஸ்டாலின் பதிலடி

ஆயுள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் விதிகளை மீறும் ஆளுநரை திமுக எதிர்த்துக் கொண்டுதான் இருக்கும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுநருக்கு ஸ்டாலின் பதிலடி-வீடியோ

    சென்னை: தமிழக ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையாம். 7 ஆண்டுகள் என்ன, ஆயுள் முழுவதும் சிறையில் வைத்தாலும் வரம்பு மீறும் ஆளுநரை எதிர்ப்பதை நிறுத்த மாட்டோம் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    10 நாட்களுக்கு பிறகு இன்று தமிழக சட்டசபை இன்று கூடியது. அப்போது ஆளுநர் ஆய்வு குறித்து பேச வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். எனினும் அதுகுறித்து சபாநாயகர் ஏற்கவில்லலை. இதனால் திமுக வெளிநடப்பு செய்தது.

    அப்போது செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசினார். அவர் கூறுகையில் தமிழக ஆளுநராக இருக்கக் கூடிய பன்வாரிலால் புரோஹித் வரம்பு மீறி செயல்படுகிறார். மாநில சுயாட்சிக்கு விரோதமாக செயல்படுகிறார். ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு நடத்துகிறார்.

    அனுமதி இல்லை

    அனுமதி இல்லை

    இது முறைதானா என சட்டசபையில் கேள்வி கேட்டு அனுமதி கேட்டேன். சபாநாயகர், ஆளுநர் குறித்து பேசுவதற்கு இது இடமில்லை அனுமதி கிடையாது என்றுவிட்டார்.

    தீர்மானம் முன்மொழிவு

    தீர்மானம் முன்மொழிவு

    1995-இல் ஏப். 26-இல் ஆளுநர் சென்னாரெட்டி குறித்து ஜெ. நீண்ட விவாதம் நடத்தியதை சுட்டிக் காட்டினேன். அப்போது ஒரு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. அப்போதைய நிதி அமைச்சர் நாவலர் அந்த தீர்மானத்தை முன்மொழிந்தார்.

    அனுமதி கோரல்

    அனுமதி கோரல்

    அந்த தீர்மானத்தில் வரம்பை மீறி செயல்பட்ட ஆளுநர் சென்னா ரெட்டியை நீக்கிட வேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை சுட்டிக் காட்டி தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு குறித்து பேச அனுமதி கோரினார்.

    வெளிநடப்பு

    வெளிநடப்பு

    ஆனால் சபாநாயகரோ அது 1995-ஆம் ஆண்டு நடந்தது. தற்போது அதெல்லாம் அனுமதிக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டார். இதை கண்டித்து திமுக சார்பில் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். ஆளுநர் மாளிகையில் இருந்து ஒரு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    7 ஆண்டுகள் சிறை

    7 ஆண்டுகள் சிறை

    அதில் ஆளுநரின் செயல்பாடுகளில் தலையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் ஆய்வு நடத்துவதை தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் மிரட்டும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார். 7 ஆண்டுகள் அல்ல, ஆயுள் முழுவதும் சிறையில் வைத்தாலும் அத்துமீறும் ஆளுநரின் செயலை கண்டிப்போம். கொள்ளையடிப்பதற்காகவே சேலம்- சென்னை பசுமை வழிச்சாலை திட்டமாகும் என்றார் ஸ்டாலின்.

    English summary
    MK Stalin walks out from Assembly and says that not 7 years, if the police puts him in jail for throughot his life, he will not stop to oppose Governor.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X