தூத்துக்குடி என். பெரியசாமி இறுதி ஊர்வலம்... ஸ்டாலின், துரைமுருகன் பங்கேற்பு!
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமியின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெறுகிறது.
தூத்துக்குடி: மறைந்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.என். பெரியசாமியின் இறுதி ஊர்வலத்தில் ஸ்டாலின், துரைமுருகன் பங்கேற்றனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி கடந்த வெள்ளிக்கிழமை சென்னை தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானார். மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதை தொடர்ந்து என்.பெரியசாமியின் உடல் சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.
என். பெரிய சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் விமானம் மூலம் நேற்று தூத்துக்குடிக்கு சென்றனர்.பின்னர் பெரியசாமியின் வீட்டிற்கு சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
என்.பெரியசாமியின் மகளும் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான கீதா ஜீவன் மற்றும் என்.பெரியசாமியின் மகன் ஜெகன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினர். அவர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஐ.பெரியசாமி, வேலு, உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
பெரியசாமியின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து பெரியசாமியின் உடல் போல்பேட்டையில் அவரது வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications