முதுபெரும் அரசியல் தலைவர் நல்லகண்ணு 93-வது பிறந்தநாள் விழா : ஸ்டாலின் நேரில் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுவின் பிறந்தநாளையொட்டி திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. தமிழக அரசியல் களத்தில் மற்ற அரசியல் கட்சி தலைவர்களாலும், பொதுமக்களாலும் பெரிதும் மதிக்கப்படும் நல்லகண்ணு இன்று தன்னுடைய 93வது பிறந்தநாளை கொண்டாடினார்.

 Stalin and TTV Dinakaran wishes Communist Party Leader Nallakannu on his Birthday

அவரின் பிறந்தநாளையொட்டி தி.மு.க செயல்தலைவர் நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும், சமூக நீதியை நிலை நாட்டவும், மதச்சார்பற்ற ஆட்சி தமிழகத்தில் அமையவும் நல்லகண்ணு தொடர்ந்து போராடி வருகிறார். அவரின் லட்சியத்தை நிலைநாட்ட நான் அனைவரும் பாடுபட வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

நல்லகண்ணுவிற்கு டி.டி.வி தினகரனும் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். தன்னுடைய வாழ்த்துப் பதிவில், அரசியல் வாழ்வில் தூய்மையும் எளிமையும் நேர்மையும் கொண்டு, பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்பவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.நல்லகண்ணு அவர்களின் பிறந்த நாளான இன்று, அவரை வணங்கி என் உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும் நல்லகண்ணுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK Working President MK Stalin and RK Nagar MLA TTV Dinakaran wishes Communist Party Leader Nallakannu on his 93rd Birthday. Nallakannu is One of the Senior most Leader of Indian Communist Party and he is Well konown for his Simplicity.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X