மேகதாது பிரச்சினையை விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.. மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை : மேகதாது பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சி செய்து வருவது குறித்தும், மத்திய அமைச்சர் சதானந்த கவுடா புதிய அணைகளை கட்ட கர்நாடக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்பும் என்றும், மத்திய அரசும் அதற்கு அனுமதி வழங்கும் என்றும் கூறியது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஸ்டாலின், இதற்காக தான் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்து வருகிறோம். நாங்கள் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அவர்கள் சட்டமன்றத்தையே கூட்ட மறுக்கிறார்கள். அனைத்து கட்சி கூட்டத்தை எங்கே கூட்ட போகிறார்கள். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால் மட்டும் தான் இதற்கு பரிகாரம் தேட முடியும் என்று கூறினார்.
தொடர்ந்து, தகவல் ஆணையர் நியமனம் குறித்து தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று தான் நம்புவதாக கூறினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications