மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பும் ஸ்டாலின், கருணாநிதி குடும்பத்தினர்
மருத்துவமனைக்கு ஸ்டாலின் வந்துள்ளார்.
Recommended Video

சென்னை: தொண்டர்களின் பதட்டத்தை தணிக்க நேற்றிரவு மருத்துவமனையிலிந்து கிளம்பி சென்ற திமுக செயல்தலைவர் ஸ்டாலின், தற்போது மீண்டும் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
கருணாநிதிக்கு 24 மணி நேரம் குறிக்கப்பட்டு, அதன்படி தீவிர சிகிச்சை மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று மதியம் முதலே காவேரி மருத்துவமனை பரபரப்பின் பிடியில் சிக்கியது. இதனால் குடும்ப உறுப்பினர்கள் சகிதம் எல்லோருமே வரத் தொடங்கிவிட்டனர்.

காத்து கிடந்தனர்
இதுவரை ஒருமுறைகூட வராத தயாளு அம்மாளும் நாற்காலியில் உட்கார வைத்து அழைத்து வரப்பட்டிருந்தார். நேற்றிரவு 11 மணி வரை குடும்பத்தினர் உள்ளிட்ட அனைத்து திமுக தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனையிலேயே காத்து கிடந்தனர்.

கிளம்பி சென்ற ஸ்டாலின்
இவர்கள் அனைவருமே மருத்துவமனையிலேயே இருந்தது தொண்டர்களை மேலும் பீதியில் ஆழ்த்தியது. எனவே நேற்றிரவு 11 மணிக்கு மேல் ஸ்டாலின் மருத்துவமனையை விட்டு புறப்பட தொடங்கினார்.

மருத்துவமனையில் கனிமொழி
அவரை தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்களும் எம்எல்ஏக்களும் ஒவ்வொருவராக கிளம்பினர். ஆனால் கனிமொழி மட்டும் விடிய விடிய மருத்துவமனையில்தான் அவர் இருந்தார். சற்று நேரம் வெளியில் சென்றிருந்த அவர் மீண்டும் மருத்துவமனைக்கு தன் கணவருடன் வந்துள்ளார்.

ஸ்டாலின் மீண்டும் வருகை
அதேபோல ஸ்டாலினும் தற்போது மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். அதேபோல, ராஜாத்தி அம்மாள், ஆ.ராஜா உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர். இவர்களை தவிர மற்ற குடும்ப உறுப்பினர்களும் விரைவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மதியம் கருணாநிதி உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தெரிவிக்க வாய்ப்பு இருப்பதால், தொண்டர்களின் வருகையும் குவியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications