வெள்ள பாதிப்பு பற்றி விவாதிக்க சட்டசபை சிறப்பு கூட்டத்தை உடனே கூட்டுக- மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தை பாதித்துள்ள கனமழை சேதங்கள் குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது, எனவே சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தை உடனே கூட்டுமாறு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், வடகிழக்கு பருவமழை தமிழகத்தை புரட்டிப் போட்டிருக்கிறது. மழை வெள்ள சேதத்தால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். குடியிருக்கும் வீடுகளை இழந்து, உடுக்க உடையும், உண்ண உணவும் இன்றி தவிக்கும் அவர்களால் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை என்று கூறியுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதிய துவங்கிய வடகிழக்குப் பருவமழை கடலூர் மாவட்டத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கடலூர் மக்களின் வாழ்வை சூறையாடிய அந்த கனமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களையும் விட்டு வைக்கவில்லை. டிசம்பர் 1 ஆம் தேதியன்று பெய்த வரலாறு காணாத மழையால் சென்னை மாநகர மக்களின் வாழ்வாதாரம் நொறுங்கிப் போய் விட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களே நேரடியாக வந்து டிசம்பர் 3 ஆம் தேதி வெள்ள சேதப் பகுதிகளை பார்வையிடும் அளவிற்கு மோசமானதொரு பாதிப்பை வடகிழக்கு பருவ மழை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தி விட்டது.
இதுவரை மழை வெள்ளத்தில் 347 பேர் இறந்துள்ளார்கள் என்று அரசு அதிகார பூர்வமாக அறிவித்தாலும், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பலி 700 பேருக்கு மேலிருக்கும் என்று வெளி வரும் செய்திகளால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். செம்பரம்பாக்கம் ஏரி தாமதமாக திறக்கப்பட்டதால் தான் இந்த பேரழிவு என்ற கருத்தும் பரவி வருகிறது. மேலும் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள்தங்களின் வாழ்வாதாரத்தை பறிகொடுத்து விட்டு திக்குத் தெரியாமல் திணறி நிற்கிறார்கள்.
லட்சக்கணக்கான ஏக்கரில் உள்ள நிலங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. விவசாயிகள், மீனவர்கள், இதர கூலி தொழிலாளிகள், வணிகர்கள், சிறு தொழில் செய்வோர், தொழிற்சாலைகள் வைத்திருப்போர் ஆகிய அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஐ.டி. கம்பெனிகளும் இந்த மழை வெள்ள சேதத்திலிருந்து தப்பவில்லை. தங்கள் எதிர்கால வாழ்க்கை எந்த திசையில் பயணிக்கும் என்பதே தெரியாமல் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். சாலைகள், பாலங்கள், சகலவிதமான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் தமிழகத்தில் சிதைந்து போய் விட்டன.
இப்போது மீண்டும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களும் கனமழையின் பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
அனைத்து தரப்பு மக்களும் மோசமாக பாதிக்கப்பட்டு ஒரு அசாதாரண சூழ்நிலை தமிழகத்தில் இப்போது நிலவுகிறது. இந்த நிலையில், மாநிலத்தை பாதித்துள்ள இந்த கனமழை சேதங்கள் குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. மக்களின் தொலைந்து போன வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், நீண்ட கால மறுவாழ்வு நடவடிக்கைகளை எடுக்கவும் மக்கள் பிரதிநிதிகள் தக்க ஆலோசனைகளை வழங்க முடியும். ஆளுங்கட்சியும், எதிர்கட்சிகளும் ஜனநாயகத் தேரின் மதிப்பு மிக்க சக்கரங்கள் என்பதில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எப்போதும் அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. அந்த வகையில் மக்களை பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க ஆழமான, அர்த்தமுள்ள விவாதம் சட்டமன்றத்தில் உடனடியாக தேவைப்படுகிறது.
தங்கள் தொகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள், நிவாரணப் பணிகள், மக்களுக்கு தேவையான மறுவாழ்வு நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கவும், தங்களது கருத்துக்களை முன் வைக்கவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு ஒரு வாய்ப்பு வழங்குவது தான் நியாயமானதாகும். ஆகவே தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரை உடனடியாக கூட்ட வேண்ண்டும் என்று தமிழக அரசை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications