ஜூன் 3ம் தேதிக்கு முன்பே... எதிர்க்கட்சித் தலைவராகி விடுவார் ஸ்டாலின்!
சென்னை: சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினை அங்கீகரித்து, சட்டசபை செயலகம் ஜூன் 3ம் தேதிக்கு முன்பாகவே அரசாணை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 3ம் தேதிதான் சபாநாயகர் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. அன்று சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவரை அவையின் முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவபரும் சேர்ந்து அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைக்க வேண்டும்.

எனவே ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கும் அரசாணை அதற்குள்ளாகவே வெளியிடப்படும் என்று தெரிகிறது.
சட்டசபை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு மிகப் பெரிய எதிர்க்கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. அக்கட்சிக்கு 89 இடங்கள் கிடைத்துள்ளன. அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு 8 இடங்கள் கிடைத்துள்ளன. மொத்தமாக இந்த இரு கட்சிகளும் சேர்ந்து 97 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சித் தலைவராகும் மு.க.ஸ்டாலின் அமைச்சர் அந்தஸ்தில் செயல்படுவார். அவருக்கு அரசு கார், அலுவலகம், செயலாளர், டிரைவர் என சகல வசதிகளும் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications