ப்ளூவேல் விளையாட்டிற்கு தடை.. மத்திய அமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
இளைஞர்களின் உயிரை காவு வாங்கும் ப்ளூவேல் விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை : இளைஞர்களின் வாழ்விற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள ப்ளூவேல் இணையதள விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தற்கொலைக்கு தூண்டும் ப்ளூவேல் விளையாட்டை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

ப்ளூவேல் விளையாடியதால் மதுரை திருமங்கலம் அருகே மாணவர் விக்னேஷ் நேற்று தற்கொலை செய்துகொண்டார். அபாயகரமான விளையாட்டை தடை செய்து நாட்டின் எதிர்கால சிற்பிகளான குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். ப்ளூவேலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், உள்துறை அமைச்சகம் முடக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த கடிதத்தை மத்தி யஅமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோருக்கு ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார். இளைஞர்களை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் இந்த விளையாட்டில் இருந்து அவர்களை மீட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications