Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளப் பகுதிகளில் மாதத் தவணை கட்ட தாமதமானால் அபராதம் இல்லை- ஸ்டேட் பேங்க்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் ஏற்கனவே ஸ்டேட் பேங்கில் கடன் பெற்று வீடு, கார் வாங்கியிருந்தால் நவம்பர், டிசம்பர் மாதங்களுக்குரிய மாதத்தவணை தாமதமாக கட்டினாலும் அதற்கான அபராத வட்டி செலுத்தவேண்டியதில்லை என்று ஸ்டேட் பேங்க்கின் தலைமை பொது மேலாளர் பி.ரமேஷ்பாபு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், "வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 1 கோடியை முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கி உள்ளோம். தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மழை வெள்ளச்சேதம் பெரிய அளவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏற்பட்டது. எனவே சட்டதிட்டம் எதுவும் பார்க்காமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு உணவு, குடிதண்ணீர், பாத்திரங்கள், மருந்துகள், போர்வைகள் முதலியவற்றை வழங்கி வருகிறோம்.

State bank announced no fine for late due's

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 மாதம் வரை உதவி செய்ய இருக்கிறோம். மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு ஏ.டி.எம். நிலையங்களை நாடிய போது சில இடங்களில் இணையதளம் செயல்படவில்லை. இதன் காரணமாக ஏ.டி.எம். நிலையங்கள் வேலை செய்யவில்லை.

அதன் காரணமாக கை அடக்க ஏ.டி.எம். எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு உடனடியாக மக்களுக்கு அவர்கள் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க உதவி செய்தோம். இதற்காக படகுகள், ஆட்டோக்கள், ரோந்து செல்லும் வேன்கள் ஆகியவற்றை பயன்படுத்தினோம். இந்த பணியில் ஸ்டேட் பாங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர். இன்னமும் அவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேங்க் சார்பில் உதவி செய்து வருகிறார்கள்.

மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளில் எங்கள் வங்கியின் கிளைகள் ஞாயிற்றுக் கிழமைகளில் திறந்து வைத்து சேவை செய்து வருகிறோம். வீடு, கார் வாங்க கடன் பெற்றவர்கள் மற்றும் தனிப்பட்ட கடன் வாங்கியவர்கள் மாதம்தோறும் தவணை முறையில் கடனை கட்டி வருகிறார்கள். மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அவர்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு உரிய தவணையை தாமதமாக கட்டினால் அதற்கான அபராத வட்டித்தொகையை வசூலிக்க மாட்டோம்.

விவசாய கடன் பெற்றவர்கள் குறித்து அவர்களுக்கு எத்தகைய சலுகை அளிக்க இயலும் என்று அதற்காக வங்கி அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி முடிவு செய்ய இருக்கிறோம். இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தவர்களுக்கு பாலிசி தொகையை முழுவதுமாக கட்ட கால அவகாசம் அளிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+