தூத்துக்குடியில் மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை.. ஒரே நாளில் நிறைவடைந்தது
தூத்துக்குடியில் மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் நடத்திய ஆய்வு நிறைவடைந்தது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துவிட்டனர். தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று இரவு தூத்துக்குடிக்கு வரவுள்ளனர்.

அதற்கு முன்னதாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தைச் சேர்ந்த குழுவினர் இன்று தூத்துக்குடிக்கு வந்தனர். மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களான ஜெயசந்திரன் மற்றும் சித்தரஞ்சன் மோகன்தாஸ் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்திய பிறகு கலவரம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிட்டனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் உடைக்கப்பட்ட பொருட்கள், அருகில் இருந்த ஏடிஎம் மற்றும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எரிக்கப்பட்ட இடத்தையும் ஆட்சியர் சந்தீப் நந்தூரியுடன் பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பில் எரிக்கப்பட்ட பகுதிகள், வாகனங்களையும் ஆய்வு செய்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் 52 பேரையும், உயிரிழந்தவர்களின் உறவினர்களையும் நேரில் சந்தித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் இன்று முழுவதும் விசாரணை நடத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கலவரத்திற்கு காரணம் என்ன, மனித உரிமை மீறல் நடந்ததா, சேதமடைந்த பொருட்களின் மதிப்பு எவ்வளவு ஆகியவற்றை குறித்து விசாரணை நடத்தப்பட்டு பின்னர் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதை தொடர்ந்து அதிகாரிகள் சென்னை திரும்புகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications