ஜனவரி 4ம் தேதி காலை 7.50 மணிக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியுமா...?

அதாவது அந்த நேரத்தில் தமிழகத்தின் மின் தேவை 12,141 மெகாவாட் என்ற அளவில் இருந்துள்ளது. இதனால் தேவையைச் சமாளிக்க முடியாமல் மின்வாரிய அதிகாரிகள் சற்று திணறிப் போய் விட்டார்களாம். இதனால் பல பகுதிகளில் கூடுதல் மின்தடை அமலாகியுள்ளது.
இதற்கு முன்பு அக்டோபர் மாதத்தில் இதை விட 20 மெகாவாட் அளவுக்கு குறைவான அளவில் அதிகபட்ச மின் தேவை இருந்துள்ளது. மேலும் இதுவரை இவ்வளவு அதிக அளவில் ஒரு நேரத்தில் மின் தேவை அதிகரித்ததில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சனிக்கிழமை காலை தமிழகத்தின் மின் கையிருப்பு அளவானது கிட்டத்தட்ட 7600 மெகாவாட் அளவில்தான் இருந்துள்ளது. இதில் டான்ஜெட்கோவின் அனல் மின்சாரத்தின் பங்கு 3270 மெகாவாட் ஆகும். மத்திய தொகுப்பிலிருந்து கிடைத்தது 3293 மெகாவாட் ஆகும். டான்ஜெட்கோவின் நீர் மின்சாரத்தின் அளவு 1271 மெகாவாட் ஆகும்.
வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அது கடந்த ஒன்றரை மாதங்களாக இயங்கவில்லை. இதனால் நமக்குக் கூடுதல் மின்சாரம் கிடைக்காத நிலை காணப்படுகிறது. ஆனால் இது தற்போது மீண்டும் இயங்கும் நிலைக்குத் திரும்பியுள்ளதால் மின்வாரிய அதிகாரிகள் சற்று ஆறுதலடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications