முழுக்க முழுக்க வெண்கலம்.. அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ள கருணாநிதி சிலை தயார்!
திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை நிறுவப்பட உள்ளது.
சென்னை: திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை நிறுவப்பட உள்ளது.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி இவர் மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் இவரது சிலை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ளது. இந்த சிலை இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ளது.

அறிவாலயத்தில் ஏற்பாடு
இந்த சிலை அறிவாலயத்தில் வைக்கப்பட உள்ளது. அறிவாலயம் உள்ளே நுழைந்ததும் நடுவில் தற்போது அண்ணா சிலை இருக்கிறது. அண்ணாவின் சிலைக்கு அருகிலேயே கருணாநிதியின் சிலை வைக்கப்பட இருக்கிறது. இதற்காக அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

முழுக்க முழுக்க வெண்கல சிலை
இந்த சிலை முழுக்க முழுக்க வெண்கலத்தால் செய்யப்பட்டது. இதை மிகவும் தத்ரூபமாக வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த சிலையை வடிவமைக்க இரண்டு வாரம் ஆனதாக கூறப்படுகிறது. இன்னும் இதில் சில கடைசி கட்ட பணிகள் மட்டும் செய்யப்பட்டு வருகிறது.

யார் செய்கிறார்
இந்த சிலையை திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்த சிற்பி தீனதயாளன் வடிமைக்கிறார். இவர் இதற்கு முன்பே தலைவர்களுக்கு சிலை வடிவமைத்துக் கொடுத்தவர். சில கோவில் சிலைகளையும் வடிவமைத்துள்ளார். இவரின் கைவண்ணத்தில்தான் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
|
பெரிய விழா
இந்த சிலை திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படுவது பெரிய விழாவாக நடக்க உள்ளது. ஆனால் இதற்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் இந்த சிலையின் பணிகளைக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications