ஸ்டெர்லைட் ஆலையை இயக்க கூடாது.. நிர்வாக பணியை செய்யலாம்.. பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை செய்யலாம், ஆனால் ஆலையை இயக்க கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை செய்யலாம், ஆனால் ஆலையை இயக்க கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்களாக போராடி வந்தனர். இந்த போராட்டத்தின் போது, மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த செயல் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர்.

எதிர்ப்புகளை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக அரசாணை வெளியிட்டு இருக்கிறது. இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கு விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது. இதில் மீண்டும் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி இன்று ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் வாதிடப்பட்டது. இதில் தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதில், ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள மட்டும் அனுமதி. இறுதி தீர்ப்பு வரும்வரை ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதி கிடையாது.
உள்ளே பராமரிப்பு பணிகளை நடத்தலாம். ஆனால் ஆலையை இயக்க கூடாது. உள்ளே முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று கூறி, வழக்கு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications