போராட்டகளமான தூத்துக்குடி.. கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைக்கும் போலீஸ்.. ஒரே பரபரப்பு
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்துக்கு பேரணியாக வந்தவர்கள் மடத்துக்குளம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
Recommended Video

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்ல முயன்ற பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர். இதையடுத்து அவர்கள் பதிலுக்கு கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசினர்.




தூத்துக்குடி அருகே உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது.

இதையடுத்து இன்று முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 1000-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

ஆனால் அவர்கள் ஆட்சியரகத்துக்கு ஒரு கி.மீ. முன்னதாக மடத்துக்குளம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். மக்கள் மதுரை- தூத்துகுடி புறவழி சாலையை பொதுமக்கள் நெருங்க முடியாத வகையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

144 தடை உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் பேரணி சென்றால் அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் ஒருவருக்கு மண்டை உடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸார் மீது கற்களை வீசி தாக்கினர். போராட்டம் தீவிரமடைந்து வருவதால் எந்த நிமிடத்திலும் போலீசார் தடியடி நடத்தி விரட்ட தயார் நிலையில் உள்ளனர். இதையடுத்து பனியமாதா ஆலயத்தில் இருந்து மீனவர்கள் பேரணியாக சென்று அங்கே ஒரு போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். போலீஸ் வாகனத்தை கீழே தள்ளி பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.


இதையடுத்து போலீஸார் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் ஒரு பகுதி போலீஸார் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து மற்ற பகுதியில் ஒன்று திரண்ட போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.













Click it and Unblock the Notifications