ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு.. 76 குடும்பங்களுக்கு சம்மன் அனுப்பிய தேசிய மனித உரிமைகள் ஆணையம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணையில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டம் செய்த அப்பாவி மக்கள் மீது போலீஸ் மூர்க்கமாக துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியது. இந்த மோசமான தாக்குதல் காரணமாக 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் காயமடைந்தவர்கள் எல்லோரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிக்ஹ்சை பெற்று வருகிறார்கள்.
இந்த மோசமான சம்பவத்திற்கு மாநில மனித உரிமை ஆணையம் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது சுடப்பட்டு காயமடைந்தவர்களை நேற்று மாநில மனித உரிமைகள் ஆணையம் சந்தித்தது.
ஸ்டெர்லைட் போராட்டம் நடந்த பகுதிகளில் ஆணைய உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். ஆட்சியர் அலுவலகத்திலும் ஆய்வு நடத்தினர். போராட்டத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களிடமும் விசாரணை செய்தனர்.
இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கும், காயமடைந்த 63 பேரின் குடும்பங்களுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இன்று எல்லோரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications