தேர்தல் பிரசாரத்தின்போது டிராபிக் ராமசாமி மீது கல்வீசி தாக்குதல்! ஜீப் கண்ணாடி உடைப்பு!!
ராயபுரம் : ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த டிராபிக் ராமசாமி மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவரது ஜீப் கண்ணாடி உடைந்தது. அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சுயேச்சையாக போட்டியிடுகிறார். அதற்காக தொகுதியில் அவர் தனது ஆதரவாளர்களுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் இணைந்து சமூக ஆர்வலர் சசிபெருமாளும் பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று மாலை கொருக்குப்பேட்டை இளையமுதலி தெருவில் டிராபிக் ராமசாமி, சசிபெருமாள் ஆகியோர் ஒரு வேனில் சென்று பிரசாரம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இருந்த சிலர் அவரை தகாத வார்த்தைகளால் கேலி செய்ததாக கூறப்படுகிறது. உடனே ட்ராபிக் ராமசாமி ஜீப்பில் இருந்து இறங்கிவந்து அவர்களைத் தட்டிக்கேட்டார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே சில மர்ம நபர்கள் மறைந்திருந்து டிராபிக் ராமசாமி மீது கல்வீசி தாக்கினர்.
இதில் அவர் லேசான காயமடைந்தார். அவரது ஜீப் கண்ணாடியும் உடைந்தது. இதனால் டிராபிக் ராமசாமி கல்வீசி தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி தனது ஆதரவாளர்களுடன் அங்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொருக்குப்பேட்டை போலீசார் விரைந்து சென்று அவர்களை சமரசம் செய்தனர். இதனால் மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications