பாலாறு விவகாரம்: தமிழகத்தில் உள்ள ஆந்திர நிறுவனங்களுக்கு பாடம் புகட்டுவோம்- வேல்முருகன்
சென்னை: பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை உயர்த்தும் நடவடிக்கையை ஆந்திரா அரசு கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் ஆந்திரா அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவதை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிர்த்து போராடி வருகிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் போராட்டங்களைத் தொடர்ந்து தமிழக அரசும் தமது கடுமையான எதிர்ப்பை ஆந்திரா அரசிடம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் வாணியம்பாடி அருகே பாலாற்றின் குறுக்கே புல்லூர் தடுப்பணையை மேலும் 10 அடிக்கு உயர்த்தும் நடவடிக்கையை ஆந்திரா அரசு மேற்கொண்டு வருவது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் தமிழகத்தின் 2,000 ஏக்கர் விவசாயம் பொய்த்துப் போகும். அத்துடன் தமிழகத்தில் பாலாறு என்ற நதியே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது.இதேபோல் தடுப்பணை அருகே உள்ள புல்லூர் கனகநாச்சியம்மன் கோவில் தமிழகத்துக்குச் சொந்தமானது. தற்போது இந்த கோவிலுக்கும் உரிமை கொண்டாடுகிறது ஆந்திரா.
ஆந்திராவின் இந்த அடாவடித்தனத்தைக் கண்டித்து போராட்டத்தில் குதித்து விவசாய பெருங்குடி மக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக ஆதரவு தெரிவிக்கிறது. பாலாறு படுகை விவசாயிகளின் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் பங்கேற்கிறது. பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை உயர்த்தும் நடவடிக்கையை ஆந்திரா அரசு கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் ஆந்திரா அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்.
இதையும் மீறி ஆந்திரா அரசு தான்தோன்றித்தனமாக செயல்படுமேயானால் தமிழகத்தில் எந்த ஒரு ஆந்திராவைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களோ, கல்வி நிறுவனங்களோ ஒருபோதும் இயங்க விடாமல் பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கை விடுக்கிறேன்.
இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications