அரசுப் பள்ளிகளில் "லேப்டாப்" திருட்டு- 20 செல்போன்களுடன் 8ம் வகுப்பு மாணவர் கைது
சேலம்: சேலத்தில் அரசுப் பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு போன விவகாரத்தில் எட்டாம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 20 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகேயுள்ள உலிபுரம் ஊராட்சிக்குட்பட்ட மூக்காகவுண்டன்புதூர் இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை இரவு பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கு அலுவலக பயன்பாட்டுக்கு வைத்திருந்த இரு மடிக்கணினிகளை திருடிச்சென்றனர்.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் லட்சுமி தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
இதில் அதே பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த மாணவரின் வீட்டில் போலீஸார் ஆய்வு நடத்தியபோது, பள்ளியில் திருடப்பட்ட இரு மடிக்கணினிகள், 20க்கும் மேற்பட்ட செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த மாணவரை போலீஸார் கைது செய்து சேலத்தில் உள்ள கூர்நோக்கு மையத்தில் சேர்த்தனர். இரு மடிக்கணினிகளையும் பறிமுதல் செய்தனர். அவரிடமிருந்த செல்போன்கள் எங்கிருந்து திருடப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications